மேப்மைஇந்தியா வழங்கும் இந்தியா மேப்ஸ் 7.1

டிஜிட்டல் மேப்புக்ள், ஜிபிஎஸ் நாவிகேசன், லொகேசன் அப்ஸ் மற்றும் என்டர்ப்ரைஸ் போன்றவற்றை தயாரித்து வழங்கும் மேப்மைஇந்தியா நிறுவனம் மேப்ஸ் ஆப் இந்தியாவின் புதிய வெர்சனான 7.1ஐ களமிறக்கி இருக்கிறது.
இந்த புதிய மேப் 7.1 மில்லியன் இடங்களையும், 1.9 மில்லியன் கலோ மீட்டர் சாலைகளையும், 600000 நகரங்கள் மற்றும் கிராமங்களையும், 4751 மாநகரங்கள் மற்றும் அவற்றின் தெருக்களையும், 39 மாநகரங்கள் மற்றும் அங்கு இருக்கும் வீடுகளைப் பற்றிய குறப்புகளையும் மேலும் 36 மாநகரங்களின் முழு 3டி மாடல்களையும் வழங்குகிறது.
அதோடு இந்த மேப் ஹிந்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிறது. மேலும் இந்த புதிய வெர்சன் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களையும் விவரிக்கிறது. மேலும் அந்த தளங்களின் போட்டோக்களையும் இந்த மேப் வழங்குகிறது. மேலும் இந்த மேப் 9 மொழிகளில் பேசி வழிகாட்டுகிறது. இந்த மேப்பை www.mapmyindia.com/store என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம்.
ஒரு இடத்திற்கு முதல் முறையாக செல்பவர்களை இந்த மேப் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பலாம். இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சூப்பராக வெளிக்கொணரும் இந்த புதிய மேப் வெர்சன் கண்டிப்பாக ஒரு சிறப்பான வழிகாட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications