Home
News

என்னடா இப்படி இறங்கிடீங்க? 90GB டேட்டா.. ஒரே நேரத்துல 10 டிவைஸ்.. 200GB ரோல் ஓவர்.. அசத்தும் Vodafone!

தனியார் டெலிகாம் நிறுவனமாக இருந்தாலும் கூட விஐ (VI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய 2 நிறுவனங்களால் கொடுக்கப்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்பதே உண்மை.

இருப்பினும், வோடபோன் நிறுவனமானது அவ்வப்போது தன்னால் முடிந்த பதிலடிகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படியான ஒரு பதிலடி தான் விஐ மிஃபை (Vi MiFi) டிவைஸ். இதுவொன்றும் வோடாபோன் நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்போ அல்லது மிகவும் சமீபத்திய அறிமுகமோ இல்லை.

90GB டேட்டா.. ஒரே நேரத்துல 10 டிவைஸ்.. அசத்தும் Vodafone!

இது வோடாபோன் ஐடியாவின் கீழ் ஏற்கனவே கிடைக்கும் ஒரு தயாரிப்பு தான். இது ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு போர்ட்டபிள் ஹாட்ஸ்பாட் டிவைஸ் (Portable Hotspot Device) ஆகும். அதாவது நீங்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டுசெல்லக்கூடிய ஒரு மினி வைஃபை டிவைஸ் ஆகும்.

இந்த விஐ மிஃபை டிவைஸின் விலை என்ன? இதன் கீழ் என்னென்ன திட்டங்கள் உள்ளன? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த டிவைஸால் அதிகபட்சம் எவ்வளவு இண்டர்நெட் ஸ்பீடை (Internet Speed) வழங்க முடியும்? இதோ விவரங்கள்:

விஐ மிஃபை விலை மற்றும் அம்சங்கள்: ஒரு வருட உத்தரவாதத்துடன் வரும் விஐ மிஃபை டிவைஸின் விலை வெறும் ரூ.2000 மட்டுமே ஆகும். இதுவொரு ஒன்டைம் பீஸ் ஆகும், அதாவது ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணமாகும். இது ஒரே நேரத்தில் 10 டிவைஸ்கள் வரையிலான கனெக்ஷனை ஆதரிக்கும்.

விஐ மிஃபை வழங்கக்கூடிய அதிகபட்ச பதிவிறக்க வேகம் 150எம்பிபிஎஸ் ஆகும். ஆனால், இந்தியாவில் உள்ள எந்தவொரு 4ஜி நெட்வொர்க்குகளில் நீங்கள் இந்த அளவிலான வேகத்தை பெற முடியாது என்பதே நிதர்சனம். சரி வாருங்கள், விஐ மிஃபை டிவைஸின் கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

விஐ மிஃபை ப்ரீபெய்ட் திட்டங்கள்: விஐ மிஃபை டிவைஸிற்கென இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. முதலாவது மாதத்திற்கு ரூ.399 க்கும், இரண்டாவது மாதத்திற்கு ரூ.499 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. நன்மைகளை பொறுத்தவரை ரூ.399 திட்டத்தின் கீழ் 50ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

கூடுதலாக ரூ.399-ன் கீழ் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் ஆதரவும் (அதாவது பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு நகர்த்தும் ஆதரவும்) உள்ளது. ஒருவேளை நீங்கள் 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால் அதன் பின்னர் நீங்கள் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடததக்கது.

அடுத்ததாக உள்ள ரூ.499 திட்டமானது 90ஜிபி என்கிற மொத்த டேட்டாவை வழங்குகிறது. இதுவும் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் ஆதரவை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி மேலே பார்த்த ரூ.399 திட்டத்தை போலவே, இதுவும் 90ஜிபி என்கிற டேட்டா லிமிட்டை மீறிய பின்னர், கூடுதலாக நுகரப்படும் ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ.20 கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இதைவிட மலிவான விலையில் ஃபைபர் இண்டர்நெட் திட்டங்கள் கிடைக்கிறது தான். இருப்பினும் விஐ மிஃபை டிவைஸ் ஆனது உங்களுக்கு தேவைப்பட்டால், நீங்கள் வோடாபோன் ஐடியா இணையதளம் மூலமாகவோ அல்லது விஐ-டின் அதிகாரப்பூர்வ ரீடெயில் ஸ்டோர் மூலமாகவோ இதை ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Many Vi Users Does not Know About MiFi Device Which Connect 10 Devices Offers Up to 90GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X