இந்த BSNL பிளானை ஒருமுறை ரீசார்ஜ் பண்ணிட்டா போதும்! அடுத்த 1 வருஷத்துக்கு 600GB டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ்!

|

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு ப்ரீபெய்ட் பிளான் (Prepaid Plan) ஆனது அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு தேவையான டேட்டா நன்மைகள், வாய்ஸ் கால் நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும்! ஏனென்றால் அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனத்திடம் அப்படி ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் பிளான் - உண்மையிலேயே இருக்கிறது தான்! அதென்ன பிளான்? அதன் விலை நிர்ணயம் என்ன? ஒரு ஆண்டு முழுவதும், அதாவது 365 நாட்களுக்கும் போதுமான நன்மைகளை வழங்குகிறது என்றால் அப்படி என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

365 நாட்கள் வேலிடிட்டி + 600GB டேட்டாவை வழங்கும் BSNL பிளான்!

நாம் இங்கே பேசும் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.1999 ஆகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் BSNL வாடிக்கையாளர்களுக்கு - எந்த விதமான தினசரி வரம்பும் இல்லாமல் - மொத்தம் 600 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 600ஜிபி டேட்டாவை கொஞ்சம் கொஞ்சமாகவும் "செலவு" செய்யலாம் அல்லது ஒரே நாளில் கூட தீர்க்கலாம்!

ஏற்கனவே விலையை மீறிய நன்மைகளை வழங்கும் ரூ.1,999 திட்டமானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4G சேவைகள் அறிமுகமானதும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், 600 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் ஒரு திட்டம் வெறும் ரூ.1999 க்கு கிடைத்தால், யார் தான் அதை ரீசார்ஜ் செய்ய மறுப்பார்கள்? மேலும் இந்த திட்டம் பெரிய எண்ணிக்கையிலான டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்!

ஏனென்றால், இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டமானது 365 நாட்கள் என்கிற நீண்ட கால வேலிடிட்டியையும் வழங்குகிறது. அதாவது ரூ.1999 திட்டத்தை இப்போது (டிசம்பர் 2022-ல்) ரீசார்ஜ் செய்தால், வருகிற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலாக உங்களுக்கு வேறு எந்த செலவும் இருக்காது. அதுமட்டுமின்றி இந்த திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதன் கீழ் ஒரு இலவச ஓடிடி நன்மையையும் அணுக கிடைக்கிறது.

அது ஈரோஸ் நவ் தளத்திற்கான இலவச சந்தாவாகும். ஆனால் இந்த திட்டத்துடன் அணுக கிடைக்கும் Eros Now என்டர்டெயின்மென்ட் சந்தாவானது, திட்டத்தை ரீசார்ஜ் செய்த முதல் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் இலவச பிஆர்பிடி (PRBT) நன்மையையும் அணுக கிடைக்கும். அதாவது இலவச பெர்சனல் ரிங் பேக் டோனையும் (Personal Ring Back Tone) பெறுவீர்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது!

அது என்னவென்றால் பிஆர்பிடி நன்மையையும் கூட 30 நாட்கள் மட்டுமே அணுக கிடைக்கும். அதே போல, இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் லோக்துன் கன்டென்ட்டும் கூட 30 நாட்கள் மட்டுமே இலவசமாக கிடைக்கும். இப்படியாக இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் எல்லா நன்மைகளுமே விலையை மீறிய நன்மைகளாகவே உள்ளன. ஆனாலும் கூட இந்த திட்டத்தில் ஒரு சின்ன குறை உள்ளது. அது என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 600ஜிபி டேட்டாவை நீங்கள் தீர்த்து விட்டால் உங்கள் டேட்டா ஸ்பீட் ஆனது 40 Kbps ஆக குறைக்கப்படும். ஆக உங்களுக்கு ஏதேனும் டேட்டா தேவைகள் ஏற்பட்டால் BSNL-இன் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

இதெல்லாம் சரி, BSNL நிறுவனம் எப்போது 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யும்?என்று கேட்டால்.. இதுவரை வெளியான தகவல்களின்படி, ஜனவரி 2023 க்குள் உள்ளூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவைகளை இந்தியாவில் "பயன்படுத்த" தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக இந்தியா முழுவதும் BSNL-இன் 4G சேவைகள் ஆனது அறிமுகம் செய்யப்பட சுமார் 18 முதல் 24 மாதங்கள் ஆகலாம். மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Many BSNL Users Does Not Know About This 600GB Data Prepaid Plan with 365 Days Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X