Home
News

வெறும் ரூ.3 செலவில்.. 35 நாட்கள் வேலிடிட்டி.. இப்படி ஒரு BSNL ரீசார்ஜ் இருக்குனு பலருக்கும் தெரியாது!

ஒரு பேச்சுக்காக 1 மாதம் வேலிடிட்டி என்று கூறினாலும் கூட, பெரும்பாலான திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டி உடனே வருகின்றன. இதன் மூலம் 12 மாதங்களுக்கு, 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் நாம் இங்கே பார்க்க போகும் திட்டம் சற்றே வித்தியாசமான வேலிடிட்டியை கொண்டுள்ளது.

நாம் இங்கே பேசுவது ஒரு நாளுக்கு ரூ.3 என்கிற செலவில், மொத்தம் 35 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் பிஎஸ்என்எல்-ன் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs.107 Prepaid Plan) பற்றித்தான். பிஎஸ்என்எல்-ன் கீழ் பல எண்ணிக்கையிலான ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளதால் ரூ.107 திட்டமானது பலரின் கண்களில் சிக்காமல் போய் இருக்கலாம்!

வெறும் ரூ.3 செலவில்.. 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் BSNL ரீசார்ஜ்!

ஆனால் இன்று அப்படி இருக்கப்போவதில்லை. ஏனென்றால் பெர் மினிட் பேக் (Per Minute Pack) என்று அழைக்கப்படும் பிஎஸ்என்எல் ரூ.107 திட்டத்தின் வேலிடிட்டி என்ன? இதன் கீழ் கிடைக்கும் வழக்கமான நன்மைகள் என்னென்ன? கூடுதல் நன்மைகள் என்ன? இது ஏன் பெர் மினிட் பேக் என்று அழைக்கப்படுகிறது? போன்ற விவரங்கள் இதோ:

முன்னரே குறிப்பிட்டபடி, பிஎஸ்என்எல் ரூ.107 திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்களாகும். இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, இது 200 லோக்கல் மற்றும் நேஷனல் வாய் கால் நிமிடங்களை வழங்கும். அதாவது இலவசமாக கிடைக்கும் வாய்ஸ் கால் நிமிடங்களுக்கு பின்னர் ஒவ்வொரு நிமிடத்திற்கும் (Per Minute) கட்டணம் விதிக்கப்படும்.

டேட்டா நன்மைகளைப் பொறுத்தவரை, இது 3ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவை வழங்கும். இது வாட்ஸ்அப், மெசேஞ்சர், டைரக்ட் மெசேஜ் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம், இமெயில் பிளாட்ஃபார்ம் மற்றும் வெப் ப்ரவுஸர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

ஒருவேளை நீங்கள் வோல்ட்இ (VoLTE) ஆதரவுடன் வரும் ஸ்மார்ட்போனின் வழியாக பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தால், ரூ.107-ஐ கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். வாய்ஸ் கால், டேட்டா போன்ற வழக்கமான நன்மைகளுடன் சேர்த்து, இந்த திட்டம் சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

ரூ.107 திட்டமானது இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை (BSNL Tunes) வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தை இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக ரீசார்ஜ் செய்தால், முன்னதாக ரீசார்ஜ் செய்த திட்டங்களில் பயன்படுத்தப்படாத வேலிடிட்டி (Unused Validity) புதிய ரீசார்ஜின் வேலிடிட்டி உடன் சேர்க்கப்படும்.

இந்த திட்டத்தில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால், இதன் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை அன்லிமிடெட் ஆக இருக்காது. அதாவது 3ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு, குறைந்தபட்ச எஃப்யுபி (FUP) வேகத்தின் கீழ் எந்த டேட்டா நன்மையையும் கிடைக்காது. திடீர் டேட்டா தேவைகள் ஏற்பட்டால், பிஎஸ்என்எல்-ன் ஏதாவது ஒரு டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

உங்களுக்கு பெரிய அளவிலான வாய்ஸ் கால் பயன்பாடு இருக்காது மற்றும் தினசரி டேட்டா தேவைகள் இருக்காது என்றால்.. அதே சமயம் பட்ஜெட் விலையில் நல்ல வேலிடிட்டியை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜை தேடுகிறீர்கள் என்றால் பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டமானது - உங்களுக்கான சரியான திட்டமாக இருக்கும்!

Best Mobiles in India

English summary
Many BSNL Customers Not Aware Of This 35 Days Validity Plan Check Rs 107 Recharge Benefits Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X