7 ஆண்டுகள் நிறைவு: கலக்கும் மங்கள்யான் விண்கலம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.!

|

அண்மையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தது என்வென்றால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான் விண்கலம் ஆனது வெற்றிகரமாக 7-வது ஆண்டை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது சார்ந்த தகவல்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

எதிர்காலத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்

எதிர்காலத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்

அதாவது இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்னவென்றால், மங்கள்யான் திட்டத்தில் அனைத்து அம்சங்களும் எதிர்பார்த்ததைவிட சாதகமாகவே அமைந்துள்ளன. எனவே இதில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள்தான் நமது எதிர்கால திட்டங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.

ட மங்கள்யானின் 5 ஆய்வு

குறிப்பாக இப்போது கூட மங்கள்யானின் 5 ஆய்வு சாதனங்கள் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகின்றன. எனவே இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் பருவநிலை மாறுபாடுகள், வளிமண்டல சூழல்கள் குறித்து பல தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!

7 முதல் 9 ஆண்டுகள் வரை

7 முதல் 9 ஆண்டுகள் வரை

குறிப்பாக இந்த விண்கலத்தின் ஆய்வுக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதேபோல் தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள்தான் 7 முதல் 9 ஆண்டுகள் வரை செயல்படும் என்று கூறப்படுகிறது.

கத்தி பட பாணியில் கருத்து கணிப்பு- சராசரி இந்தியர் ஐபோன் 13 வாங்க 700 மணிநேரம் உழைக்கனும்: நம்ம 2-வது இடம்!கத்தி பட பாணியில் கருத்து கணிப்பு- சராசரி இந்தியர் ஐபோன் 13 வாங்க 700 மணிநேரம் உழைக்கனும்: நம்ம 2-வது இடம்!

ரு விண்கலத்தை 7 ஆண்டுகளுக்கு

ஆனால் ஒரு விண்கலத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க வைக்க முடியும் என்பதை இந்த மங்கள்யான் நிரூபணம்செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..

 மயில்சாமி அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரை

மேலும் மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியது என்னவென்றால், பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வந்து ஆராய்ச்சி மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக இப்போது கூட அதன் செயல்திறன் மிகவும் நன்றாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

 அடுத்த ஒரு ஆண்டிற்கு இந்த

அதேபோல் அடுத்த ஒரு ஆண்டிற்கு இந்த மங்கள்யான் விண்கலம் நன்றாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை. பின்பு இந்த விண்கலம் வாயிலாக செவ்வாய் கிரகம் குறித்த பல தரவுகளை இஸ்ரோ சேகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிம் கார்டு கிடையாது.. DTO சட்டம் கடுமையானது.. இனி இதை தான் பின்பற்ற வேண்டும்18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிம் கார்டு கிடையாது.. DTO சட்டம் கடுமையானது.. இனி இதை தான் பின்பற்ற வேண்டும்

றது. பின்பு இஸ்ரோவி

அதாவது செவ்வாய் கிரகத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ள இந்த விண்கலம் உதவி வருகிறது. பின்பு இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், மங்கள்யான் திட்டக் குழுவை தலைமைதாங்கி வழிநடத்தியவருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தது என்வென்றால், 7-வது ஆண்டை நிறைவு செய்துள்ள மங்கள்யான் விண்கலம் திருப்திகரமான உணர்வை அளித்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன்கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைத் தேடி அதை நிரூபிக்கும் பணியை மும்முரமாக செய்து வருகிறது. இஸ்ரோவின் சந்திரயான்-2 இந்த பணிக்காக நிலவில் மேல் வளம் வந்து கொண்டிருக்கிறது. சந்திரயான் -2 விண்கலம் சமீபத்தில் தனது இரண்டாம் ஆண்டு நிறைவை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன், சந்திரயான் -2 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துவிட்டது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் -2 விண்கலம் நிலவின் நிழல் நிறைந்த பகுதிகளில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரோ அமைப்பு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது .

Best Mobiles in India

English summary
Mangalyan spacecraft exploring Mars has successfully completed its 7th year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X