சார் உடனே அங்க போங்க: லைவ்வில் தற்கொலை முயற்சி- பேஸ்புக், போலீஸார் இணைந்து நடவடிக்கை!

|

டெல்லியில் பேஸ்புக் லைவ்வில் தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்த நபர் குறித்து பேஸ்புக் நிர்வாகம் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் அந்த நபர் போலீஸாரால் மீட்கப்பட்டார்.

பேஸ்புக் லைவ்வில் தற்கொலை

பேஸ்புக் லைவ்வில் தற்கொலை

39 வயதான நபர் பேஸ்புக் லைவ்வில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தார். அவர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக் வீடியோ லைவ் செய்தார். வீடியோவில் அந்த நபர் தனது கை நரம்பை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு வெட்டிக் கொண்டார். இது குறித்து பேஸ்புக் நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

பேஸ்புக் நிர்வாகம் அளித்த புகார்

பேஸ்புக் நிர்வாகம் அளித்த புகார்

பேஸ்புக் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்தனர். பேஸ்புக் நிர்வாகம் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேஸ்புக் லைவ்வில் தற்கொலைக்கு முயன்று ரத்தத்தோடு இருந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேஸ்புக் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையையும், போலீஸார் விரைந்து எடுத்த நடவடிக்கையும் பலரும் பாராட்டினர்.

சமூகவலைதளங்கள் பயன்பாடு

சமூகவலைதளங்கள் பயன்பாடு

சமூகவலைதளங்கள் பயன்பாடு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இதில் பிரதானமாக இருப்பது வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகும். சமூகவலைதளங்களில் போலி தகவல்கள், பொய் பரப்புரை செய்பவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க நிறுவனங்களிடம் தொடர்ந்து அந்தந்த நாட்டில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நிறுவனம் போலி கணக்குகள், தகவல்களை கண்டறிவதில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொழில்நுட்பங்கள் வளர்ச்சி

தொழில்நுட்பங்கள் வளர்ச்சி

தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் இந்த காலக்கட்டத்தில் நாமும் அதற்கு ஏற்றவாறு நம்மை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றாலும் நாம் அறியப்படும் தகவலின் உண்மைத் தன்மை என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம். சமீபத்தில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்க தவறியதற்கு ரஷ்ய அதிகாரிகள் சமூகவலைதளங்கள் மீது வழக்கு கொடுத்தனர்.

பேஸ்புக் பயன்பாடு

பேஸ்புக் பயன்பாடு

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேஸ்புக் நிறுவன பயன்பாட்டை உலக அளவில் பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை அதிகம். இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை. இருப்பினும் இதற்கான விவாதம் இருதரப்பிலும் நடைபெற்று வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Man who Tried to Commit Suicide on Facebook Live: Rescued by Facebook and Police

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X