Home
News

வீடியோ., பெத்த தாய ஓவர்டேக் பண்ணிட்டாரே- ட்ரோன் மூலம் வாக்கிங் செல்லும் நாய்: கொரோனாவா அப்டினா?

கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கியுள்ளனர். இந்த வைரஸ் மிருகங்களுக்கு தொற்றாது என தெரிவிக்கப்படும் நிலையில் ட்ரோன் மூலம் நாய் வாக்கிங் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் எத்தனை பேருக்கு கொரோனா

இந்தியாவில் எத்தனை பேருக்கு கொரோனா

ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 38 பேருக்கு அதிகரித்து இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 172 ஆக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தககவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாநிலம் வாரியாக என்று பார்க்கையில் மகாராஷ்டிராவில் தான் இந்த தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் இந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது இடத்தில் கேரளா

இரண்டாவது இடத்தில் கேரளா

மகாராஷ்டிராவிற்கு அடுத்தப்படியாக பாதிக்கப்பட்ட மாநிலம் என்று பார்க்கையில் கேரளாவில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலம் கலாபுராகில் 76 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை

அதேபோல் டெல்லியை சேர்ந்த 68 வயது பெண் ஒருவரும் மும்பையைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இறப்பு குறித்து தெரிவிக்கையில் இவர்களுக்கு முன்னதாகவே உடலில் பாதிப்பு இருந்ததாகவும் கொரோனா தாக்கியவுடனே உயிரழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற மாநிலத்தின் பாதிப்பு

பிற மாநிலத்தின் பாதிப்பு

அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 16 பேரும் கர்நாடகாவில் 11 பேரும் கொரோனா தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். டெல்லியில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு

தமிழகத்தை பொருத்தவரையில் இதுவரை 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவரான காஞ்சிபுரம் என்ஜினியர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேபோல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு பரவி கிடக்கிறது.

அடுத்தடுத்து அதிகரி்க்கும் கொரோனா பாதிப்பு

அடுத்தடுத்து அதிகரி்க்கும் கொரோனா பாதிப்பு

இந்தோனேஷியாவில் இருந்து தெலங்கானா வந்த 7 பேர் உள்பட 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எதிர்பார்க்காத விதமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விழிப்புணர்வு தகவலும் வந்துக் கொண்டே இருக்கிறது.

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை, பல்வேறு அலுவலகத்தில் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் வணிக வளாகங்கள் மற்றும் கூட்டம் கூடும் இடங்களை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா அச்சம் பதற்றம்

உலக நாடுகளில் கொரோனா அச்சம் பதற்றம்

கொரோனா அச்சம் பதற்றம் உலக நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து தோன்றியது என உலக நாடுகள் குற்றம் தெரிவித்து வரும் நிலையில், கொரோனா அமெரிக்காவில் தோன்றியது என்று அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் பரவச் செய்தது என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்தார்.

சீன தூதரை அழைத்து கண்டனம்

சீன தூதரை அழைத்து கண்டனம்

இந்த அறிவிப்புக்கு வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை சீன வைரஸ் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல்

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல்

இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் நாட்டில் அவசர நிலையை பிரகடனப் படுத்தினார். அதேபோல் தற்போது இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். மேலும் ஸ்பெயின், செர்பியா உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகிறது.

வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பல்வேறு நாடுகளின் அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மனிதர்களிடம் மட்டுமே தொற்றும் தன்மை

மனிதர்களிடம் மட்டுமே தொற்றும் தன்மை

இந்த வைரஸானது மனிதர்களிடம் மட்டுமே தொற்றும் தன்மை கொண்டது. விலங்குகளையோ, பறவைகளையோ தொற்றாது. எனவே தங்களது செல்லப் பிராணிகளின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சைப்ரசை சேர்ந்த வகிஸ் டெமிட்ரி (Vakis Demetriou) என்ற நபர் தனது நாய்க் குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்வதற்கு சிறிய வகை பறக்கும் ட்ரோனை பயன்படுத்தியுள்ளார்.

ஆளில்லா தெருவில் சுதந்திரமாக வாக்கிங்

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவுவதோடு பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ட்ரோனில் கயிறு கட்டி அதை நாய்க்குட்டியின் கழுத்து பெல்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்கிங் அழைத்து செல்லப்பட்டது. நாய்க்குட்டி ஆளில்லா தெருவில் சுதந்திரமாக வாக்கிங் சென்றது. வகிஸ் டெமிட்ரி இந்த ட்ரோனை வீட்டில் இருந்தபடியே இயக்கி வருகிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
man used a drone to his dog for walking: video spread on facebook, twitter, whatsapp!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X