இந்த நேரத்துல இப்படியெல்லாம் யோசிக்க தோணுமா? சுந்தர் பிச்சையிடம் உதவி கேட்ட இளைஞர்.! வைரல்.!

|

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்பை விட கொரோனாத் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

த இரண்டாவது அலையின் தாக்கம்

குறிப்பாக இந்த இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது கணிக்க முடியாத அளவிற்கு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. தற்போது ஒருநாள் தொற்று பாதிப்பு 15000-ஐ கடந்துள்ளது. கொரோனா வைரஸ் ஆனது வாய், மூக்கு என சுவாசத்துடன் நேரடித் தொடர்புடைய உறுப்புகள் வழியாக உள்ளே நுழைந்து நுரையீரலை அடையும்போதுதான் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிரிழக்கும் நிலை வரை சென்றுவிடுகிறது.

கொரோனா முதல் அலையின்போது

குறிப்பாக இந்த கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

கதவு திறந்திருக்கும்: களமிறங்கிய OYO- தனிமைப்படுத்துவதில் இனி சிரமம் வேண்டாம்., நாங்க இருக்கோம்!கதவு திறந்திருக்கும்: களமிறங்கிய OYO- தனிமைப்படுத்துவதில் இனி சிரமம் வேண்டாம்., நாங்க இருக்கோம்!

கொரோனா நிலைமை

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்து வருவது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவிற்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக சுந்தர் பிச்சைதகவல் தெரிவித்துள்ளார்.

சரியான வாய்ப்பு- சும்மா இல்ல 75% வரை தள்ளுபடி: எல்லாமே அள்ளலாம்- பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை!சரியான வாய்ப்பு- சும்மா இல்ல 75% வரை தள்ளுபடி: எல்லாமே அள்ளலாம்- பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை!

தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில்

அதிலும் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா விழிப்புணர்வு குறித்த முக்கிய தகவல்களை பகிரவும் நிதி
பயன்படுத்தப்படும் என்று சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.

இந்த கடினமான சூழ்நிலையிலும் நெட்டிசன் ஒருவர் தனது ஜிமெயில் அக்கவுண்டை மீண்டும் பயன்படுத்த உதவுமாறு கேட்டுள்ளார். அதுவும் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு கோவிட் நிவாரணம் அறிவித்த ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ள மதன் என்ற நெட்டிசன், தனது ஜிமெயில் அக்கவுண்டின் பாஸ்வேர்டை மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே இதனால் ஜிமெயில் மீண்டும் பயன்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ள அவர், பாஸ்வேர்டை ரீசெட் செய்து அக்கவுண்டை ரெக்கவர் செய்வதற்கான உதவிகள் வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கடினமான சூழ்நிலையில் சீரியஸாக நிவாரணம் அறிவித்துள்ள சுந்தர் பிச்சையிடம் தனது ஜிமெயில் அக்கவுண்டை ரெக்கவர் செய்ய உதவி கேட்ட அந்த நெட்டிசன் பதிவு தற்போது இணையத்தில் அதிக வைரலாகியுள்ளது. மேலும் இவர் கேட்ட உதவிக்கு பலர் பதில் கொடுத்துள்ளனர். அதாவது கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் சுந்தர் பிச்சை இந்தியா வர முடியாது என்றும், கட்டுப்பாடுகள் நீங்கிய பின்பு சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்து உங்களின் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றுவார்என மற்றொருநெட்டிசனும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Man tweets to Sundar Pichai to recover his Gmail account: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X