நியாயமா ராசா இது.. iPhone 14 Pro வாங்க துபாய் சென்ற நபர்: காரணம் கேட்டால் ஆடி போவீங்க..

|

கொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஐபோன் 14 ப்ரோ வாங்குவதற்காக துபாய் சென்றிருக்கிறார். ஐபோன் 14 ப்ரோ மாடல் தான் இந்தியாவில் கிடைக்கிறதே.. ஏன் துபாய்க்கு சென்றார் என்று கேள்வி வருகிறதா.. அதற்கான பதிலை பார்க்கலாம்.

ஐபோன் 14 சீரிஸ்

ஐபோன் 14 சீரிஸ்

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸை அறிமுகம் செய்தது.

ஐபோன் 14 சீரிஸ் இல் மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்றிருந்து. அது iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகும்.

முந்தைய மாடல் போன்ற வடிவமைப்பு பழைய சிப்செட் ஆதரவு என பல விமர்சனங்களை iPhone 14, iPhone 14 Plus பெற்றாலும், iPhone 14 Pro மாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

iPhone 14 Pro Maxஐ விட ஐபோன் 14 ப்ரோ மாடலுக்கு தான் நல்ல வரவேற்பு. காரணம் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்-க்கு இணையான அம்சங்களுடன் ஐபோன் 14 ப்ரோ அதைவிட குறைந்த விலையில் கிடைக்கிறது.

துபாய்க்கு சென்ற நபர்

துபாய்க்கு சென்ற நபர்

இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஐபோன் 14 ப்ரோ 512ஜிபி வேரியண்ட் மாடலை வாங்குவதற்கு என துபாய்க்கே சென்றுள்ளார்.

கொச்சியை சேர்ந்தவர் தீரஜ் பள்ளியில். ஆப்பிளின் தீவிர ரசிகரான இவர் ஐபோன் 14 ப்ரோ மாடலின் அம்சங்கள் மற்றும் விலையை கண்டு உற்சாகமடைந்துள்ளார்.

இதையடுத்து இந்தியாவில் புதிய ஐபோன் மாடலை வாங்கிய முதல் நபராக தான் இருக்க வேண்டும் என்ற ஆசையில் நேரடியாக துபாய்க்கு சென்று ஐபோன் 14 ப்ரோ மாடலை வாங்கி இருக்கிறார்.

லாபமா.. நஷ்டமா..

லாபமா.. நஷ்டமா..

இந்த மாடல் தான் இந்தியாவில் கிடைக்கிறதே.. அவர் ஏன் வெளிநாட்டுக் போனார்.. துபாயில் இந்த மாடலின் விலை குறைவா.. அப்படி என்றால் அவர் விமானப் பயணத்துக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டியிருக்குமே.. துபாய் சென்று ஐபோன் 14 ப்ரோ வாங்கியதால் அவருக்கு ஏதும் லாபம் இருக்கிறதா.. அல்லது நஷ்டமா.. என பல கேள்விகள் வருகிறதா. அனைத்துக்கும் விடை இருக்கிறது பார்க்கலாம் வாங்க.

இந்திய விலை மற்றும் துபாய் விலை

இந்திய விலை மற்றும் துபாய் விலை

ஐபோன் 14 ப்ரோ 512ஜிபி மாடலை வாங்க துபாய்க்கு பயணம் செய்வதாக பள்ளியில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் அறிவித்தார்.

அவர் வாங்கிய மாறுபாடு இந்தியாவில் ரூ.1,59,900 என கிடைக்கிறது. ஆனால் பள்ளியில் இந்த ஐபோன் மாடலை துபாயில் 5,949 AED என்ற விலைக்கு வாங்கியுள்ளார். அதாவது இதன் இந்திய விலை சுமார் ரூ.1,29,000 ஆகும்.

ஆஹா அப்போ அவருக்கு லாபம் தானா என்றால் அதுதான் இல்லை.

ரூ.10,000 அதிக செலவு..

ரூ.10,000 அதிக செலவு..

இந்தியாவில் கிடைக்கும் விலையை விட சுமார் ரூ.30,000 குறைவாக துபாயில் ஐபோன் 14 ப்ரோ மாடல் கிடைத்துள்ளதே.. அது அவருக்கு லாபம் தானே என்றால் அதுதான் இல்லை. அங்கு ஒரு சிக்கல் இருக்கிறது.

பள்ளியில் துபாய் சென்று ஐபோன் 14 ப்ரோ மாடல் வாங்கியதன் மூலம் இந்தியாவில் கிடைக்கும் விலையை விட ரூ.10,000 அதிகமாக செலுத்த வேண்டி இருந்துள்ளது.

ஐபோன் 14 ப்ரோ விலை..

சுற்றுலாவுக்கு சென்று புதிய சாதனங்கள் வாங்கும் பிற நபர்களை போல் இல்லாமல், பள்ளியில் ஐபோன் 14 ப்ரோ மாடல் வாங்குவதற்கு என்றே துபாய் சென்றிருக்கிறார்.

துபாய்க்கு சென்றுவர விமான டிக்கெட்டுக்கு மட்டும் அவர் ரூ.40,000 செலுத்த வேண்டி இருந்துள்ளது. எ

னவே அவர் இந்தியாவில் கிடைக்கும் ஐபோன் 14 ப்ரோ விலையை விட ரூ.10,000 அதிகமாக செலவிட்டு தான் இந்த மாடலை வாங்கி இருக்கிறார்.

இந்திய விலை: ரூ.1,59,900

துபாய் விலை: சுமார் ரூ.ரூ.1,29,000 + விமான டிக்கெட் ரூ.40,000

ரூ.10,000 கூடுதல் செலவில் துபாய் சென்றுவிட்டாரே

ரூ.10,000 கூடுதல் செலவில் துபாய் சென்றுவிட்டாரே

குறைந்த விலையில் ஐபோன் மாடலை வாங்க வேண்டும் என்று மட்டும் பள்ளியில் துபாய்க்கு செல்லவில்லை.. இந்தியாவில் ஐபோன் 14 ப்ரோ மாடல் வாங்கிய முதல் நபராக இருக்க வேண்டும் என்ற ஆசையில் சென்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஏது எப்படியோ.. வெறும் ரூ.10,000 கூடுதல் செலவில் விமான பயணம் செய்து துபாயை பார்த்து திரும்பிவிட்டார் என்று தோன்றலாம்.

ஆனால் பள்ளியில் இப்படி செய்வது இது முதன்முறையல்ல.

தீவிர ஆப்பிள் ரசிகர்

தீவிர ஆப்பிள் ரசிகர்

பள்ளியில் இதுகுறித்த பேசியதாக வெளியான தகவலின்படி, தான் ஒரு ஆப்பிள் ரசிகர் எனவும் முன்னதாக அறிமுகமான ஐபோன் மாடலை வாங்க இதேபோல் துபாய் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pic: Social Media

Best Mobiles in India

English summary
Man Travel to Dubai to buy iPhone 14 Pro: Do you Know the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X