18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.! நெகிழ்ச்சியான சம்பவம்.!
தற்போது ஃபேஸ் ஆப் என்ற ஒரு ஆப் இணையத்தில் வைரலாகி உள்ளது. அதோடு அது சில செய்திகளையும் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆப் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி (Artificial Intelligence) பயனர்களுக்கு அவர்களின் வயதான முதுமை தோற்றத்தை காட்டுகிறது.

ஃபேஸ் ஆப் செயலி
மேலும் சமூக வலைதளங்களில் இப்போது வயதான முகங்களே தென்படுகின்றன, ஃபேஸ் ஆப் செயலி மூலம் அனைவரும் தங்களின் முகங்களை வயதான தோற்றத்துக்கு மாற்றி ஷேர் செய்து வருகின்றனர். குறிப்பாக விளையாட்டு விரர்கள்,
அரசியல்வாதிகள், சினிமா, பிரபலங்கள் என அனைவரும் ஃபேஸ் ஆப் மூலம் வயதாகியுள்ளனர்.

18வருடங்களுக்கு முன் காணாமல் போன நபர்
இந்நிலையில் சீனாவில் 18வருடங்களுக்கு முன் காணாமல் போன நபர் ஃபேஸ் ஆப் செயலி மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் மீண்டும் இணைந்தார்.

கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
சீனாவில் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் ஃபேஸ் ஆப் செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஷை யு வீபெங் எனும் அவர், சிறுவயதில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தனிப்படையின் உதயிடன்..
இந்நிலையில் இணையத்தில் வைரல் ஆகிவரும் ஃபேஸ் ஆப் செயலி மூலம் அவரைக் கண்டறிய அவரது பெற்றோர்
முடிவெடுத்துள்ளனர், அதன்படி அவரது பால்ய கால புகைப்படங்கள் பலவற்றை தற்போதைய உருவத்திற்கு மாற்றிய
அவரது பெற்றோர், தனிப்படையின் உதயிடன் நீண்ட தேடலுக்கு பின்னர் தனது மகனைக் கண்டறிந்துள்ளனர்.

டி.என்.ஏ பரிசோதனை
மேலும் டி.என்.ஏ பரிசோதனையிலும் உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அவர் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார், இந்த
சம்பவம் நாடு முழுவதும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications