வைரல் வீடியோ: ATM அறையிலிருந்து 'அதை' ஏன்யா திருடான? ரொம்ப சீப்பான திருட்டு.. ஆனா மற்றவருக்கு ஆபத்து..

|

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர்கள் போன்றவற்றைப் பாதுகாப்பு ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள், பொதுமக்கள் கூடும் பொது இடங்கள் போன்ற பல இடங்களின் நுழைவாயில்களில் ஹேண்ட் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ள. இந்த சானிடைசர் பாட்டில்கள் கடந்த ஒரு வருடத்தில் முக்கியமான பொருளாக மாறிவிட்டது. இதன் தேவையும் அதிகரித்துவிட்டது.

ATM அறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் சானிடைசர்

ATM அறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் சானிடைசர்

ATM அறைகளிலும் ஹேண்ட் சானிடைசர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது. இப்படி, ATM அறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் சானிடைசர் பாட்டிலை ​​ஒரு நபர் ஏடிஎம் அறையில் இருந்து பாட்டிலுடன் அபேஸ் செய்துள்ளார். அவர் ஹேண்ட் சானிடைசரை எப்படித் திருடுகிறார் என்பது ATM பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த பதிவான காட்சி வீடியோ தற்பொழுது ஆன்லைனில் வெளிவந்து வைரல் ஆகி வருகிறது.

சி.சி.டி.வி கேமரா காட்சிகள்

சி.சி.டி.வி கேமரா காட்சிகள்

அந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா தனது டிவிட்டரில் பக்கத்தில் ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளார். சுமார் 33 விநாடிகள் பதிவு செய்யப்பட்ட ATM அறையின் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் அந்த நபர், முகமூடி அணிந்து கொண்டு, ஏடிஎம் பயன்படுத்தியபின் தனது அட்டையை மீண்டும் தனது பாக்கெட்டில் வைப்பதைக் காட்டுகிறது. பின்னர் அவர் ATM அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஹேண்ட் சானிடைசர் பாட்டில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் கேஸிலிருந்து வெளி எடுத்து தனது தோள்பட்டை பையில் மறைத்து வைக்கிறார்.

அடடா.. இத்தனை நாளாய் ஜிமெயிலில் இது தெரியாம டைம் வேஸ்ட் பண்ணிட்டோமே.!அடடா.. இத்தனை நாளாய் ஜிமெயிலில் இது தெரியாம டைம் வேஸ்ட் பண்ணிட்டோமே.!

இவர்களை 'கிளெப்டோமேனியாக்' என்று கூறுவார்கள்

இவர்களை 'கிளெப்டோமேனியாக்' என்று கூறுவார்கள்

இந்த சம்பவம் ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்துள்ளது. இவர்களை கிளெப்டோமேனியாக் (Kleptomania) என்று கூறுவார்கள், பொது இடங்களில் இருக்கும் பொருட்களை யாருக்கும் தெரியாமல் திருட நினைக்கும் குணம் கொண்டவர்கள் இவர்கள். நாட்டில் மில்லியன் கணக்கான ஏடிஎம்கள் உள்ளன, அனைத்து ATM-களில் இந்த ஹேண்ட் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் போன்ற முட்டாள்களிடமிருந்து சானிட்டீசரைக் காப்பாற்ற, ஒவ்வொரு ஏடிஎம்மிலும் சுமார் ரூ. 200 முதல் ரூ.300 வரை இருக்கும் கூண்டு வைக்க வேண்டும்.

சானிடைசரை திருடலாமா?

சானிடைசரை திருடலாமா?

இதை இந்தியாவில் உள்ள அனைத்து ATM மையங்களுக்கும் நாம் செய்ய வேண்டுமானால் இது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவை அதிகரிக்கும். இது தேவையில்லாத செயல் மற்றும் தேவை இல்லாத செயலாகும். ATM மையங்களைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள சானிடைசரை திருடாமல் கண்ணியமாக நடந்துகொண்டால் அனைவருக்கும் பாதுகாப்பு. ஒருவர் செய்யும் தவறினால் அடுத்தவர்களுக்குப் பாதிக்கப்படும் அபாயம் இங்கு உருவாகியுள்ளது. உங்கள் நல்வாழ்வை நல் ஒழுக்கத்துடன் கவனித்துக் கொள்ளுங்கள். என்று வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

வைரல் ஆகும் வீடியோ இது தான்..

இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி, 27,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு பயனர், "Mtlb kuch bhi ... #HumNahiSudhrenge என்று டேக் செய்து, பாதுகாப்புக்காக முகமூடி அணியத் தெரிந்த மனிதனுக்கு, ஏன் அங்கு சானிட்டைசர் வைக்கப்பட்டுள்ளது என்று தெரியாமலா இருந்திருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். யாருடைய பாதுகாப்பிற்காக அது அங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதை இவர்களைப் போன்ற மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்று மற்றொரு நபர் கமெண்ட் செய்துள்ளார்.

இவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் குமுறும் நெட்டிசன்ஸ்

இவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் குமுறும் நெட்டிசன்ஸ்

மற்றொருவர், "பொதுச் சொத்தை திருடுவதற்கும் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும், இவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அந்த நபரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும், அப்போது தான் இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்" என்று கமெண்ட் செய்துள்ளார். எதை-எதைத் திருட வேண்டும், எதைத் திருடக் கூடாது என்று கூடவா இவர்களுக்கு அறிவு இல்லாமல் போயிற்று என்று மற்றொருவர் கூறியுள்ளார். இப்படியான செயலை கொரோனா தோற்று தீவிரமாகப் பரவி வரும் நேரத்தில் செய்திருக்கக் கூடாது என்பதே வருத்தம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Man steals hand sanitizer from ATM video goes viral on the internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X