குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட்போன் வாங்க மாட்டை விற்ற தந்தை!

|

இமாச்சல் பிரதேசத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் என்பவர், தனது குழந்தைகளின் ஆன்லைன் படிப்பிற்காக புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தன்னிடம் இருந்த ஒரே வருமான ஆதாரமான மாட்டை வெறும் ரூ.6,000 விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

குல்தீப் குமார்

குல்தீப் குமார் ஜ்வாலமுகியில் உள்ள கும்மர் கிராமத்தைச் சேர்ந்தவர். மார்ச் மாதத்தில் ஊரடங்கு துவங்கப்பட்ட நிலையில், பள்ளிகளும் மூடப்பட்டன. இவரது குழந்தைகள் அன்னு மற்றும் திப்பு நான்காம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் படித்து வந்தனர். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியதும், குழந்தைகளுக்குப் படிப்பைத் தொடர ஸ்மார்ட்போன் வாங்கப் பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ .6,00 கடன்

ஊரடங்கு நாட்களில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தனது குழந்தைகளின் படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்று குலதீப் ஸ்மார்ட் போன் வாங்க ஊரில் உள்ள வங்கி மற்றும் தனி நபர் என்று அனைவரிடமும் ரூ .6,00 கடன் கேட்டிருக்கிறார். ஆனால் அவரது மோசமான நிதி நிலைமை காரணமாக, யாரும் அவருக்கு உதவத் தயாராக இல்லை. இருப்பினும் குல்தீப் மனந்தளரவில்லை.

மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.!மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.!

ஸ்மார்ட்போன் கட்டாயம் தேவை

பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் குழந்தைகளின் படிப்பைத் தொடர விரும்பினால் ஸ்மார்ட்போன் கட்டாயம் தேவை என்று கூறியுள்ளனர். குறிப்பாக அவரிடம் ரூ .500 கூட இல்லாத நிலையில் ரூ.6,000 ஏற்பாடு செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் என்றும் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்ததாகக் கண்ணீருடன் கூறியுள்ளார்.

அவர் முடிந்த வரை எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார், ஆனால் பணம் மட்டும் கிடைக்கவில்லை, குழந்தைகளின் கல்வி தடைப்படக் கூடாது என்பதற்காகத் தனது மாட்டை ரூ .6,000 க்கு விற்கமுடிவு செய்திருக்கிறார். அதேபோல், குழந்தைகளின் படிப்பிற்காகத் தனது ஒரே வருமானமாக இருந்த மாட்டை விட்டு ஆன்லைன் வகுப்பிற்காக ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார்.

நடிகர் சோனு சூத்

குல்தீப் தன்னிடம் இருந்த மாட்டை வைத்து தான் பால் விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கதையைக் கேட்ட பலரும் உதவ முன்வந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சோனு சூத் இந்த செய்தியைத் தந்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளை திரும்பப் பெற உதவ முன்வந்துள்ளார், மேலும் குலதீபின் விவரங்களைப் பற்றியும் தனது ட்வீட்டில் கேட்டுள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Man sells cow to buy smartphone for online studies of his children : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X