Google Pay மூலம் பணம் அனுப்ப முயன்றவரிடம் ரூ.96,000 அபேஸ்! எப்படி தெரியுமா?

|

கூகுள் பே (Google Pay) சேவையைப் பயன்படுத்திய மும்பையைச் சேர்ந்த நபரின் வங்கி அக்கௌன்ட்டில் இருந்து ரூ.96,000 தொகையை ஆன்லைன் கொள்ளையர்களால் அபேஸ் செய்துள்ளனர். தற்பொழுது இந்த அதிர்ச்சி தரும் செய்தி கூகுள் பே பயனர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

கூகுள் பே சேவை

கூகுள் பே சேவை

கூகுள் பே சேவை இந்தியாவில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக BHIM மற்றும் Paytm போன்ற சேவைகளை விட, இந்தியப் பயனர்கள் கூகுள் பே சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரபலமான கூகுள் பே சேவையிலும் கூட ஆபத்துகள் உள்ளது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!

 கூகுள் பே-எலக்ட்ரிக் பில் சேவை

கூகுள் பே-எலக்ட்ரிக் பில் சேவை

மும்பையைச் சேர்ந்த, 31 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கடந்த வாரம் தனது வீட்டின் மின்சார பில் தொகையைச் செலுத்துவதற்காகக் கூகுள் பே சேவையைப் பயன்படுத்தியுள்ளார். கூகுள் பே சேவையில் உள்ள 'எலக்ட்ரிக் பில்' என்ற பிரத்தியேக சேவையை அவர் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க! ஈஸியா ஒரு வழி இருக்கு!டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க! ஈஸியா ஒரு வழி இருக்கு!

தோல்வி அடைந்த பரிவர்த்தனை

தோல்வி அடைந்த பரிவர்த்தனை

கூகுள் பே சேலையில் உள்ள எலக்ட்ரிக் பில் ஆப்ஷனை பயன்படுத்தி, அந்த நபர் தனது பில் தொகையை செலுத்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவர் செய்த பரிவர்த்தனை தோல்வி அடைந்தது. 'Transaction Pending' என்ற செய்தி அவருக்கு கூகுள் பே செயலியில் வந்துள்ளது.

கூகுள் சர்ச் செய்த பயனர்

கூகுள் சர்ச் செய்த பயனர்

இதைப் புகார் கொடுப்பதற்காக, கூகுள் பே சேவையின் 'கஸ்டமர் கேர் எண்ணை' கூகுளில் சர்ச் செய்துள்ளார். கூகுள் சர்ச் இல் இருந்து எடுக்கப்பட்ட போலி கஸ்டமர் கேர் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தனது புகாரைத் தெரிவித்திருக்கிறார்.

Vu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்! விலை என்ன தெரியுமா?Vu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

அபேஸ் லிங்க்

அபேஸ் லிங்க்

கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல பேசிய ஆன்லைன் கொள்ளையர்கள், கூகுள் பே சேவையில் இப்படியான பிரச்சனைகள் நடப்பது இயல்பு என்றும், இதை உடனே சரி செய்வதாகவும் கூறி, அவர் மொபைல் எண்ணிற்கு ஒரு லிங்க்-கை அனுப்பியுள்ளனர்.

அக்கௌன்ட்டில் இருந்து ரூ. 96,000 திருட்டு

அக்கௌன்ட்டில் இருந்து ரூ. 96,000 திருட்டு

ஆன்லைன் கொள்ளையர்கள் அனுப்பிய அந்த 'மெசேஜ் லிங்க்' கிளிக் செய்த அடுத்த சில நிமிடங்களில், அந்த நபரின் அக்கௌன்ட்டில் இருந்து ரூ. 96,000 அபேஸ் செய்யப்பட்டுள்ளது. தனது அக்கௌன்ட் இல் இருந்து ரூ.96,000 ரூபாய் திருடப்பட்டது தெரிந்த உடனே, அருகிலுள்ள மும்பை போலீசாரிடம் புகை தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Man Robbed Of Rs 96,000 While Using Google Pay : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X