காதலியை ஈபே தளத்தின் மூலம் விற்பனை செய்ய காதலன் முடிவு: பின்பு நடந்தது என்ன?
குறிப்பாக டேல் லீக்ஸ் அவரது காதலியைப் பற்றி அந்த வலைதளத்தில் பல்வேறு பிரிவில் விளக்கம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதள ஷாப்பிங் பொறுத்தவரை அமேசான், பிளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் போன்று ஈபே என்ற வலைதளமும் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த தளத்தில் நீங்கள் வாங்க பொருட்களை மிக எளிமையாக ஏலத்தில் வாங்கலாம் என்று
கூறப்படுகிறது.

குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்காத பல எலக்டிரானிக்ஸ் பொருட்கள் கூட ஈபே தளத்தில் மிக எளிமையாக கிடைக்கும். மேலும் இந்த வலைதளத்தைப் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈபே
இந்த ஈபே தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அரிதான பொருட்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும், அதுவும் பழைய பொருட்களைப் புதுப்பித்துப் பேக் செய்யப்பட்ட பொருட்களை மற்ற சந்தையை விடக் குறைவான விலையில் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

பழிவாங்கும் நடவடிக்கை
இந்நிலையில் இந்த தளத்தை முழுமையாக தெரிந்து கொண்ட ஒருவர் தனது காதலியை இந்த ஈபே தளத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

60லட்சம்
டேல் லீக்ஸ் என்பவர் தான், அவருடைய காதலி கெல்லி கிரீவ்ஸ் என்பரை ஈபே தளத்தின் மூலம் விற்பனைக்கு பட்டியலிட்டார், மேலும் இந்த தளத்தில் டேல் லீக்ஸ் பதிவிட்டதும் 81,000 நபர்கள் அதைப் பார்த்துள்ளனர், பின்பு 60லட்சம் வரை அவர் ஏலம் வந்தது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விளக்கம் எழுதினார்
குறிப்பாக டேல் லீக்ஸ் அவரது காதலியைப் பற்றி அந்த வலைதளத்தில் பல்வேறு பிரிவில் விளக்கம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு நபர்கள் இதைக் கண்டித்து அவருக்கு பல பதில்களை ஈபே தளத்தின் மூலம் கூறினார்கள்.

ஈபே வலைதளம் நீக்கியது
ஆனால் மனிதர்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால், அவர் பதிவு செய்த இந்த போஸ்ட்-ஐ சிலமணி நேரங்களில் ஈபே வலைதளம் நீக்கியது. மேலும் இந்த போஸ்ட்-ஐ டேல் லீக்ஸ் மற்றும் கெல்லி கிரீவ்ஸ் இருவரும் இணைந்து தான் வெளியிட்டனர் என்பது பின்னர் தெரியவந்தது. குறிப்பாக அதில் வரும் கமென்ட்களை வாசிப்பதற்கு தான் இருவர்களும் இப்படி செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications