தலைமை நிர்வாகி தலையில் தண்ணீர் ஊற்றிய வாலிபர்! ஏன்? எதற்காக?

|

இணையம் தொடர்பான சேவைகள் மற்றும் தயாரிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற சீனாவின் பைடு (Baidu) நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு தொடக்க விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆன ராபின் லி, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேடையில் ஒருபக்கம் உரையாற்றிக் கொண்டிக்க, மறுபக்கம நிதானமாக மேடை மீது ஏறிய ஒரு வாலிபர், ராபின் லியின் தலையின் மீது ஒரு பாட்டில் தண்ணீரை ஊற்றினார்.

தலைமை நிர்வாகி தலையில் தண்ணீர் ஊற்றிய வாலிபர்! ஏன்? எதற்காக?

கூச்சலிட்ட ராபின் லி !

தண்ணீர் ஊற்றப்படும் நேரத்தில் அவர் ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் (அப்ளிகேஷன்ஸ் ஆஃப் ஏஐ) எனும் தலைப்பின் கீழ் பேசிக்கொண்டு இருந்தார், அப்போது தான் அந்த இளைஞன் அவரை அணுகி, அவரின் தலையில் தண்ணீரைக் கொட்டிவிட்டு வெளியேறினான். இச்சம்பவத்தை தொடர்ந்து "உனக்கு என்ன தான் பிரச்சனை?" என்று ராபின் லி கூச்சலிட்டார். பின் நிதானமாகி கொண்ட ராபின் லி, " சாலைகளில் செயற்கை நுண்ணறிவு திறன்களை அடைவதில் பல சிரமங்கள் உள்ளன தான். ஆனால் அந்த சிரமங்கள் பைடுவின் உறுதியை பாதிக்காது" என்று கூற, அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. பின்னர் அவர் தொடர்ந்து உரையாற்றினார்.

தண்ணீர் ஊற்றியதின் நோக்கம் என்ன?

இந்த சம்பவம் பைடு கிரியேட் 2019 நிகழ்வின் தொடக்க விழாவில் நடந்தது என்பதும், ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்வில் தான் பைடு நிறுவனத்தின் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சார்ந்த முன்னேற்றங்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடன் ராபின் லி மீது தண்ணீரை ஊற்றிய இளைஞனின் அடையாளமும் நோக்கமும் அறியப்படவில்லை என்பதும், மேலும் இந்நிகழ்வு சார்ந்த கருத்துக்களை பெறவும் அவரை அணுக முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒன்றும் புதிது அல்ல!

இந்நிகழ்வு பற்றி கருத்து கேட்கப்பட்ட போது, யாரோ ஒருவர் செயற்கை நுண்ணறிவின் மீது குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளார், ஆனால் அதுவோ முன்னோக்கி தான் செல்லும், அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறியுள்ளது. பொது மக்களின் கோபத்திற்க் ஆளாவதும், பின் கருத்து கூறுவதும் பைடு நிறுவனத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஆம் பைடு நிறுவனமும் மற்றும் ராபின் லியும் நீண்ட காலமாகவே பொதுமக்களின் கோபத்தின் இலக்குகளாக இருந்து வருகின்றனர்.

சந்திராயன்-2 ஏவுவதை பார்க்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்.!

பைடு விளம்பரத்தால் இறந்த சீனா மாணவர்!

குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டில் பைடுவின் தேடல் பக்கங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சையை பெற்ற சீன மாணவர் ஒருவர் இறந்தபோது அந்நிறுவனம் பெரும் பொது பின்னடைவை எதிர்கொண்டது. சமீபத்தில் "இந்த ஆண்டின் பைடூவின் தேடல் முடிவுகளின் தரம்" குறித்து வெளியான ஒரு பத்திரிகையாளரின் நீண்ட விமர்சனமும் பொதுமக்கள் மத்தியில் வைரலானது. வெய்போ சமூக ஊடக மேடையில் சிலர், ராபின் லியின் மீது தண்ணீர் ஊற்றப்பட்ட சம்பவத்தை கேலி செய்து வருகின்றனர். அதாவது, "நீங்கள் ராபின் லியை எவ்வளவு தான் வெறுத்தாலும் சரி, அவர் தலையின் மீது ஊற்றப்பட்ட தண்ணீர் வீணாகும்" போன்ற பதிவுகளை எழுதி வருகின்றனர்.

பைடு நிறுவனத்தை பற்றிய கூடுதல் தகவல்கள்:

பைடு நிறுவனத்தை பொறுத்தமட்டில், அது பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. பட்டியலின் படி, உலகின் மிகப்பெரிய ஏஐ மற்றும் இணைய நிறுவனங்களில் பைடுவும் ஒன்றாகும். கடந்த 2000 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ராபின் லி மற்றும் எரிக் சூ ஆகியோரால் தொடங்கப்பட்டது. அலெக்சா இணைய தரவரிசையின் படி, பைடு தேடுபொறி ஆனது நான்காவது பெரிய வலைத்தளமாகும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
A man poured a bottle of water over Baidu Chief Executive Robin Li on Wednesday at the opening of an annual conference for the Chinese search giant.Li was speaking of applications for artificial intelligence (AI) in a speech when the young man approached him, spilled the liquid over Li's head, and walked away.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X