Just In
- 10 hrs ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- 10 hrs ago
ஒரு நாள் மட்டும் காத்திருங்கள் போதும்! ரூ.10,000க்குள் அறிமுகமாகும் பக்கா ஸ்மார்ட்போன்!
- 10 hrs ago
பிப்ரவரி 7-வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: ஏனெனில் வருகிறது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!
- 10 hrs ago
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
Don't Miss
- News
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Movies
உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Amazon வாடிக்கையாளர்களே உஷார்.! பார்சல் டெலிவரி பெயரில் மோசடி - இனி செக் செஞ்சு வாங்குங்க!
கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரு பகுதியில் நடந்த சம்பவம் அமேசான் வாடிக்கையாளர்களைப் பீதியடையச் செய்துள்ளது. ஆன்லைனில் மொபைல் போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் மொபைல் போன் பார்சல் டப்பாவில் மொபைல் போனிற்கு பதிலாக ஒரு உருளைக்கிழங்கு, சில கற்கள் மற்றும் ஒரு விம் பார் சோப்பு வைக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. என்ன ஒரு புதுவிதமான திருட்டா இருக்கு, அதுவும் அமேசானில்.!

அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 8 ஆர்டர்
கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரு பகுதியில் வசிக்கும் ஹைதர் அலி என்பவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமேசான் தளத்தின் வழியாக சியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருந்திருக்கிறார். இவருடைய ஆர்டர் நான்கு தினங்களுக்கு முன்பு ஏற்கப்பட்டுக் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெலிவரியும் செய்யப்பட்டிருக்கிறது. டெலிவரி பார்ட்னர் மூலம் ஹைதர் அலியின் வீட்டிலேயே பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

அமேசான் டெலிவரி குறித்து சமீபத்தில் பதிவான புகார்கள்
அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனம் சில நேரங்களில் தவறுதலான பொருட்களை டெலிவரி செய்கிறது என்றும், இன்னும் சில நேரங்களில் போலியான வணிகர்களிடமிருந்து போலியான பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது என்றும், இன்னும் சிலர் ஏமாற்றப்படுவதாகவும் சமீபத்தில் பல செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்திகளை ஹைதர் அலியும் படித்திருக்கிறார். ஆகையால் சற்று உஷாராக இருந்திருக்கிறார்.

டெலிவரி பார்ட்னர் முன்னிலையில் பார்சலை ஓபன் செய்த வாடிக்கையாளர்
அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யும் போது, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் செயல்களைக் கேள்விப்பட்டேன். எனவே நான் ஆர்டர் செய்த பொருள் எனது கைகளுக்கு டெலிவரி செய்யப்பட்டதும், பார்சல் பெட்டியை டெலிவரி பார்ட்னர் முன்னிலையிலேயே திறந்து பார்த்தேன், அதில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் டப்பா தான் இருந்தது. இருப்பினும் நான் சாதனம் சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்தேன்.

போன் பார்சலில் சோப்பு, உருளைக்கிழங்கு மற்றும் கற்கள்
என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பார்சலில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் டப்பா தான் இருந்தது, ஆனால் அதற்குள் ஸ்மார்ட்போன் மட்டுமில்லை. ஸ்மார்ட்போன் எடைக்கு ஏற்றார் போல் பார்சலில் ஒரு சோப்பு, உருளைக்கிழங்கு மற்றும் கற்கள் நிரப்பப்பட்டிருந்தது. பார்சலில் போன் இல்லாமல் உருளைக்கிழங்கு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனேன் என்று ஹைதர் அலி கூறியுள்ளார்.

இனி பார்சல் வந்தால் செக் செய்ய மறக்காதீங்க
ஹைதர் அலி அமேசான் தளத்தில் ஆர்டர் செய்த பார்சலில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு பதிலாக எப்படி உருளைக்கிழங்கு, விம் பார் சோப்பு மற்றும் கற்கள் வந்ததென்று தெரியவில்லை என்று டெலிவரி பார்ட்னர் தெரிவித்திருக்கிறார். ஹைதர் அலி மோசடியை உறுதிப்படுத்திவிட்டு பணம் செலுத்தாமல் டெலிவரி பார்ட்னரை அனுப்பிவிட்டு, சிருங்கேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இனி உங்களுக்கு பார்சல் வந்தால் செக் செய்ய மறக்காதீங்க.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470