காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?

|

Smartphone Theft Case: நீங்க லவ் பண்ணிருக்கீங்களா பாஸ்? அட, அதான் சார் காதல் பண்ணிருக்கீங்களா? கண்டிப்பாக, எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கத் தான் செய்யும். இதில் சில காதல் கதைகள் சொல்லப்பட்டதாக இருக்கும், இன்னும் சில காதல் கதைகள் யாரிடமும் சொல்லப்படாத ஒருதலக் காதலாகக் கூட இருக்கும். எது எப்படியாக இருந்தாலும், காதல் என்று வந்துவிட்டாலே காதலியை ஸ்பெஷலாக ட்ரீட் செய்வது தான் உலக வழக்கம்.

காதலிக்காக ஸ்பெஷலாக யோசித்த காதலன்

காதலிக்காக ஸ்பெஷலாக யோசித்த காதலன்

இதற்காக ஆண்கள் மெனக்கிடும் காரியங்கள் இருக்கிறதே, ஐயையோ! அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்வளவு ஆர்வத்துடன், இரவு பகலாக யோசித்து ஸ்பெஷலாக எதையாவது செய்து, காதலியின் அன்பை பெறுவார்கள். இப்படி, சமீபத்தில் ஆன்லைன் மூலம் கிடைத்த ஒரு புதிய தோழியை, காதலியாக்கும் முயற்சிக்காக ஒரு இளைஞர் செய்த வேலையைப் பற்றிக் கேட்டால், நீங்களே வாய் அடைத்து போவீர்கள்.

இப்படி ஒரு த்ரில்லிங் லவ் ஸ்டோரியை நீங்கள் கேட்டிருக்கவே முடியாது

இப்படி ஒரு த்ரில்லிங் லவ் ஸ்டோரியை நீங்கள் கேட்டிருக்கவே முடியாது

இதுவரை, இப்படி ஒரு த்ரில்லிங் லவ் ஸ்டோரியை நீங்கள் கேட்டிருக்கவே முடியாது. காதலிக்கு கிப்ட் கொடுப்பதற்காகக் காதலன் திருட கற்றுக்கொண்டு, ஒரு ஸ்மார்ட்போன் கடையை லேடீஸ் பாத்ரூமில் இருந்து சூறையாடிய சம்பவத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். சமீபத்திய வழக்கில், தொடர்புடைய 27 வயது நபர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர், பெங்களூரு ஜே.பி. நாகர் பகுதியில் உள்ள ஷோரூமில் இருந்து 7 விலையுயர்ந்த மொபைல் போன்களை திருடியுள்ளார்.

ஸ்மார்ட்போன் ஷோரூமிற்குள் கஸ்டமர் போல நுழைந்து பதுங்கிய காதலன்

ஸ்மார்ட்போன் ஷோரூமிற்குள் கஸ்டமர் போல நுழைந்து பதுங்கிய காதலன்

இவர் ஷோரூமில் இருந்து ஸ்மார்ட்போன்களை திருடி, அதைத் தனது காதலிக்குப் பரிசளித்திருக்கிறார் என்பது தான் இந்த சம்பவத்தில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இந்த 27 வயது இளைஞன், ஸ்மார்ட்போன் ஷோரூமிற்குள் கஸ்டமர் போல நுழைந்து, அங்கிருக்கும் ஊழியர்களுக்கே தெரியாமல், இரவு முழுவதும் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கியிருந்திருக்கிறார். ஷோரூம் மூடப்பட்ட பிறகு, ஆட்கள் இல்லாத கடைக்குள் தனது வேட்டையைத் துவங்கியிருக்கிறார்.

லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய 'புது' திருடன்

லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய 'புது' திருடன்

இந்த ஸ்மார்ட்போன் ஷோரூமின் ஊழியர்கள் கடையை மூடியபோது, அவர்கள் யாரோ ஒருவரைக் கடைக்குள் வைத்துப் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்கு இறுதி வரை தெரியாமல் போனது. அதுவும் சரி தான், அவர்களுக்கு எப்படித் தெரியும், ஒரு கண்மூடித்தனமான காதலில் விழுந்த புது திருடன் அவர்களின் ஷோரூமின் பாத்ரூமிற்குள் பதுங்கியிருக்கிறான் என்று. இவரை ஏன் புது திருடன் என்று நாங்கள் கூறினோம் என்பதற்கும் காரணம் உள்ளது.

இவரை ஏன் புது திருடன் என்று கூறினோம் தெரியுமா?

இவரை ஏன் புது திருடன் என்று கூறினோம் தெரியுமா?

காரணம், இவர் ஷோரூமில் இருந்து ஸ்மார்ட்போன்களை திருடுவதற்கு முன்னாள், அவருடைய ஸ்மார்ட்போன் ராபெர்ரி திட்டத்தை எப்படிச் சரியாக நடத்துவது என்று யூடியூப் வீடியோக்களில் பல டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் வீடியோக்களை பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், யூடியூபில் எப்படி ஸ்மார்ட்போன்களை திருடுவது என்று பார்த்துக் கற்றுக்கொண்ட பிறகு தான் கஸ்டமர் போல ஷோரூமிற்குள் நுழைந்திருக்கிறார் இந்த நபர்.

எப்படி திருடுவது என்று யூடியூபில் கோச்சிங் கிளாஸ்.. ஆனால் பாவம்!

எப்படி திருடுவது என்று யூடியூபில் கோச்சிங் கிளாஸ்.. ஆனால் பாவம்!

யூடியூபில் எப்படித் திருட வேண்டும் என்று வீடியோவை பார்த்த திருடனுக்கு, எப்படி திருட்டில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்ற அடுத்த வீடியோவை பார்க்க நேரம் இல்லாமல் போய்விட்டது போல் தெரிகிறது. காரணம், இவர் பிளான் செய்த திருட்டை வெற்றிகரமாகச் செய்து முடித்தாலும், இறுதியில் போலீசாரிடம் சிக்கிவிட்டார். அதுவும் அவருடைய காதலிக்கு கிப்ட் கொடுத்த பிறகு மாட்டிக்கொண்டார் என்பது தான் அவருக்கு வேதனை. சரி, இவர் எப்படி முதலில் 7 போனை பதுங்கியிருந்து திருடினார் என்று பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் பழக்கமான காதலிக்கு கிப்ட்

இன்ஸ்டாகிராமில் பழக்கமான காதலிக்கு கிப்ட்

இந்த திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் அப்துல் முனாஃப், இவர் பீகார் மாநிலம் பூர்னியா பகுதியைச் சேர்ந்தவர். ஆனால், பெங்களூரு, பி.டி.எம் லே-அவுட்டில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னாள், மங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராமில் சந்தித்தார். அவருடன் பேசி பழகி நெருக்கமாகியிருக்கிறார். அந்த பெண் தோழியைக் காதலியாக்கும் முயற்சிக்காக ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை திருட என்ன ஒரு சாமர்த்தியம்

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை திருட என்ன ஒரு சாமர்த்தியம்

இதற்காக, ஸ்பெஷலாகவும், விலையுயர்ந்த பொருளாகவும் இருக்கக் கூடிய ஒரு புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை தனது காதலிக்குப் பரிசாக வழங்க விரும்பி இருக்கிறார். உணவகத்தில் வேலை பார்க்கும் இவரால், அவ்வளவு அதிகப் பணம் கொடுத்து ஒரு புதிய விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியாது என்பதனால், அதைத் திருட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, அந்த ஷோரூமிற்குள் நுழைந்து, அங்குள்ளவர்களின் கண்களில் படாமல் சாமர்த்தியமாக லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிவிட்டார்.

பிடித்த மாடலை திருடிக்கொண்டு மீண்டு பாத்ரூம் சென்ற திருடன்

பிடித்த மாடலை திருடிக்கொண்டு மீண்டு பாத்ரூம் சென்ற திருடன்

பின், ஊழியர்கள் அனைவரும் ஷோரூமை பூட்டிவிட்டுச் சென்ற பிறகு, இவர் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்து ஷோரூம் முழுவதும் சுற்றித் திரிந்திருக்கிறார். அவருக்குப் பிடித்த விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை தேர்வு செய்து எடுத்துக்கொண்டு, மீண்டும் லேடீஸ் பாத்ரூம் சென்று பதுங்கி இருக்கிறார். காலை ஊழியர்கள் ஷோரூமை திறந்த பின், ஷோரூமில் இருந்த லிஃப்டை பயன்படுத்தி பேஸ்மெண்ட் வழியாகத் தப்பித்திருக்கிறார்.

CCTV கேமரா வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ஊழியர்கள்

CCTV கேமரா வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ஊழியர்கள்

இவர் பேஸ்மெண்ட் வழியாக தப்பிச் செல்லும் போது, அவர் திருடிய ஒரு ஸ்மார்ட்போனை தவறவிட்டுவிட்டார். பிறகு பேஸ்மெண்ட் வழியாக ஷோரூமிற்குள் வந்த ஊழியர் தரையில் கிடந்த ஸ்மார்ட்போன் பாக்ஸை கண்டு அதிர்ந்து போனார். பின்னர், ஊழியர்கள் அனைவரும் CCTV கேமரா வீடியோவை பார்த்த போது, ஒரு நபர் லேடீஸ் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்து போன்களை எடுத்துச் சென்றதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். பின்னர் இந்த சம்பவம் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

காதலிக்கு கிப்ட் கொடுத்த பிறகு மாட்டிய காதலன்

காதலிக்கு கிப்ட் கொடுத்த பிறகு மாட்டிய காதலன்

திருடிச் சென்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து ஒரு ஸ்மார்ட்போன் மாடலை மட்டும் அந்த நபர் தனது காதலுக்கு கிப்ட் ஆக வழங்கியிருக்கிறார். அந்த போன் On செய்யப்பட்டு, இயக்கப்பட்டதும் அதன் IMEI விபரங்களை வைத்து போலீசார் அந்த நபரைச் சுற்றி வளைத்துள்ளனர். பிறகு அவரிடம் இருந்த மற்ற ஸ்மார்ட்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து, இவரைச் சிறையில் அடைத்துள்ளனர். காதலிக்காக ஸ்மார்ட்போனை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Man Hides In Ladies Restroom For The Whole Night To Steal 7 Expensive Smartphone From Showroom

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X