Home
News

ஹலோ சன்னி லியோன் இருக்காங்களா? போன் பேசிய நபர்கள் மேல் போலீஸ் புகார்!

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ரசிகர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகள் தினமும் வருவதாக டெல்லியைச் சேர்ந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்பொழுது இந்த செய்தி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அர்ஜுன் பாட்டியாலா திரைப்படத்தினால் பிரச்சனை

அர்ஜுன் பாட்டியாலா திரைப்படத்தினால் பிரச்சனை

அண்மையில் வெளியான அர்ஜுன் பாட்டியாலா திரைப்படத்திற்குப் பிறகு தான் இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது. அர்ஜுன் பாட்டியாலா திரைப்படத்தில் சன்னி லியோன் படத்தில் வரும் மற்றொரு கதாபாத்திரத்திடம் மொபைல் எண்ணைப் பகிர்ந்து கொள்வது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.

பாவப்பட்ட புனீத் அகர்வால்

பாவப்பட்ட புனீத் அகர்வால்

இந்த காட்சியில் சன்னி லியோன் பகிர்ந்த மொபைல் எண் போலி எண்ணாக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் படத்தில் பகிரப்பட்டஎண் உண்மையில் பிதாம்புராவில் வசிக்கும் 27 வயதான புனீத் அகர்வால் என்பவருக்குச் சொந்தமானது.

சன்னி லியோனுடன் பேச வேண்டும்

சன்னி லியோனுடன் பேச வேண்டும்

சன்னி லியோனுடன் பேச வேண்டும் என்று அவருக்குத் தெரியாதவர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறத் தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேளிக்கையாக நண்பர்கள் யாரோ செய்வதாக நினைத்திருக்கிறார். நூற்றுக்கணக்கா எண்களிலிருந்து அழைப்புகள் வந்த பிறகு தான் தெரிந்திருக்கிறது உண்மை என்னவென்று.

நூற்றுக்கணக்கான அழைப்புகள்

நூற்றுக்கணக்கான அழைப்புகள்

ஜூலை 26 ஆம் தேதி அர்ஜுன் பாட்டியாலா திரைப்படம் வெளியான நாளிலிருந்து, இவரின் மொபைல் எண்ணிற்கு அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான எண்களிலிருந்து வந்து இவரை கடுப்பேற்றியுள்ளது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

அகர்வாலின் அனுமதி இல்லாமல் அவர் மொபைல் எண்ணைத் திரைப்படத்தில் பயன்படுத்தியதற்கும், பலர் இவரை போன் செய்து அவதூறாகப் பேசியதற்கும், துன்புறுத்தப்பட்டதற்கும் திரைப்பட தயாரிப்பாளர் மீதும், போன் செய்தவர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். போலீஸில் புகார் அளித்த பிறகும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் புலம்பியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Man from Delhi complained to the police receiving hundreds of phone calls from Sunny Leone fans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X