10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசயம்!

|

ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்துவிட்டது என்ற நிகழ்வுகளை பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். அப்படி தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் பல ஸ்மார்ட்போன்கள் பழுதாகி விடும் சில ஸ்மார்ட்போன்கள் ரிப்பேர் செய்யும் பட்சத்தில் சரியாகி விடும். ஆனால் இங்கு ஆற்றுக்குள் விழுந்து மீட்கப்பட்ட சாதனம் ஒன்று சர்வ சாதாரணமாக வேலை செய்கிறது. அப்படி என்ன போன், என்ன நடந்தது என்று சந்தேகம் வருகிறதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

10 மாதங்களாக ஆற்றில் கிடந்த ஐபோன்

10 மாதங்களாக ஆற்றில் கிடந்த ஐபோன்

ஆற்றின் அடிப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு சாதனம் ஒன்று எப்போதும் போல் செயல்படுகிறது. சரி, ஆற்றுக்குள் விழுந்ததும் எடுத்திருப்பார்கள் வேலை செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. ஆற்றுக்குள் விழுந்து சுமார் 10 மாதங்களுக்கு பிறகு இந்த சாதனம் மீட்கப்பட்டிருக்கிறது. சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்ட இந்த தகவல் பெரிதளவு வைரலாகி இருக்கிறது. 10 மாதங்களாக ஆற்றில் இருந்த சாதனத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் மீட்டெடுத்துள்ளார். ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட சாதனம் சற்று உலர்த்திய பிறகு எப்போதும் போல் சாதாரணமாக வேலை செய்கிறது. இதுகுறித்து வெளியான அறிக்கைத் தகவலை சற்று விரிவாக பார்க்கலாம்.

ஆற்றில் தவறவிட்ட நபர்

ஆற்றில் தவறவிட்ட நபர்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேவிஸ் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு விருந்தில் பங்கேற்றுள்ளார். விருந்தில் போட்டிங் செய்த போது தனது ஐபோனை ஆற்றில் தவறவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்தாண்டு ஜூன் மாதம் Miguel Pacheco என்பவர் அதே ஆற்றில் இருந்து ஒரு ஐபோனை கண்டெடுத்துள்ளார். முதலில் Miguel Pacheco சாதனம் வேலை செய்யாது என்றே நினைத்துள்ளார். பின் air compressor-ஐ பயன்படுத்தி அந்த ஐபோனை உலர்த்தியுள்ளார்.

சாதாரணமாக எப்போதும் போல் வேலை செய்த ஐபோன்

சாதாரணமாக எப்போதும் போல் வேலை செய்த ஐபோன்

தொடர்ந்து அந்த ஐபோனை சார்ஜ் செய்துள்ளார். அப்போது அந்த ஐபோன் சார்ஜ் ஆகி இருக்கிறது. 24 மணிநேரம் சாதனத்தை உலர்த்தி விட்டு ஆன் செய்திருக்கிறார். ஐபோன் எப்போதும் போல் வேலை செய்ய தொடங்கி இருக்கிறது. ஐபோன் ஆன் செய்யப்பட்ட உடன் அதன் வால்பேப்பரில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளார். அதோடு ஆகஸ்ட் 13 என தண்ணீரில் விழந்த தேதியும் அதில் காட்டப்பட்டுள்ளது.

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிகழ்வு

பின் Miguel Pacheco ஐபோன் உரிமையாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில், வால்பேப்பரில் இருந்தவர்களின் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த பதிவு 4000 ஷேர்கள் பெற்ற பிறகு இறுதியாக சாதனத்தின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 10 மாதங்கள் ஆற்றில் கிடந்த ஐபோன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 மாதத்திற்கு ஆற்றில் போன சாதனம் மீண்டும் உரிமையாளரை அதே வேலை செய்யும் நிலையில் சென்றடைந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

IP68 ஆதரவுடன் ஐபோன்

IP68 ஆதரவுடன் ஐபோன்

சமீபத்திய ஐபோன்கள் அனைத்தும் வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு ஆதரவுக்கான IP68 மதிப்பீட்டுடன் வருகிறது. இந்த ஆதரவு மூலம் 1.5 மீட்டர் தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை கிடக்கும் சாதனம் வேலை செய்யும் என்பது உறுதி. இருப்பினும் 10 மாதங்கள் ஆற்றுக்குள் கிடந்த ஐபோன் வேலை செய்கிறது என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு

ஸ்மார்ட்போன்களை விட ஐபோன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதற்கு இதுபோன்ற சம்பவங்களும் ஒரு காரணம் என்றே கூறலாம். ஆப்பிள் சாதனம் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவில் நபர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் பைக்கில் மயங்கி விழுந்ததை அறிந்த ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படப்பட்டது. மயங்கி விழுந்ததுக்கும் ஆம்புலன்ஸ் வந்ததுக்கும் நடுவில் நடந்த விஷயமே சுவாரஸ்மானதாகும்.

பைக்கில் பயணித்தப் போது மயங்கி விழுந்த நபர்

பைக்கில் பயணித்தப் போது மயங்கி விழுந்த நபர்

எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்தப் போது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பல்ஸ் குறைந்துள்ளது. இந்த நிலையில் அவர் கட்டியிருந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் தான் அவர் உயிரை காப்பாற்றி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் ஒரு தனித்துவ அம்சம் இருக்கிறது. ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சை கட்டி இருப்பவர்களின் பல்ஸ் ரேட் குறையும் பட்சத்தில் தானாக அவசர எண்ணுக்கு அழைப்பு கொடுக்கப்படும்.

ஆப்பிள் சாதனத்தின் பிரத்யேக அம்சம்

ஆப்பிள் சாதனத்தின் பிரத்யேக அம்சம்

அதேபோல் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்தவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவருக்கு பல்ஸ் ரேட் குறைந்துள்ளது. அவர் கையில் இருந்த ஐபோன் 911 என்ற எமெர்ஜென்சி எண்ணுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்பேரில் லொகேஷனை கண்டுபிடித்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்தனர்.

File Images

Source: gizchina.com

Best Mobiles in India

English summary
Man finds iphone Which is Fell before 10 Months into the River: What Happened Next

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X