தந்தை இறந்த 7 வருடம் கழித்து கூகுள் எர்த் கொடுத்த மிகப் பெரிய சர்ப்ரைஸ்.! நெகிழ்ச்சி சம்பவம்

|

இப்போது உள்ள ஒரு சில தொழில்நுட்பங்கள் மிகவும் பாதுகாப்பு வசதியுடன் மற்றும் பல்வேறு வகையில் பயன்படும்படி உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கூகுள் நிறுவனம் பயனுள்ள தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது, அதில் மிகவும் அசத்தலான ஒரு தொழில்நுட்பம் என்னவென்றால் கூகுள் எர்த்.

 அதாவது இந்த விர்ச்சுவல் கூகுள் எர்த்

இந்த விர்ச்சுவல் கூகுள் எர்த் வசதியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது இந்த விர்ச்சுவல் கூகுள் எர்த் மூலம் பூமியின் மேற்பரப்பில் துல்லியமாக செயற்கைக்கோள் படங்கள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக கூகுள் எர்த் பயன்பாடு ஆனது பூமியில் வசிப்பவர்களின் ஒவ்வொரு தெருவும் வீடும் கூட அருமையாக பார்க்க முடியும். சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இதை உருவாக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் எர்த்தில் காணமுடியும்.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், கூகுள் எர்த் மூலம் விர்ச்சுவலாக ஒரு தெருவுக்குள் நாம் கணினி முன் அமர்ந்தபடியே சென்று ஒரு வீட்டின் வாசல் வரை காணமுடியும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அந்தத் தெருக்களில் ஒரு ஆள் நடந்து செல்வதைப் போலவே நாம் முழுமையான 360 டிகிரி அனுபவத்தை பெற முடியும். இந்த பயன்பாட்டை உலக அளவில் பலரும் பயன்படுத்துவதும் ரசிப்பதும் உண்டு. மேலும் இந்த பயன்பாட்டின் மூலம் ஏற்கனவே எடுக்கப்பட்ட தங்களுடைய வீட்டின் புகைப்படங்கள் கூகுள் எர்த்தில் காணமுடியும்.

அரட்டை அடிக்கலாமா- ஜோஹோ அறிமுகம் செய்த அரட்டை: வாட்ஸ்அப் Vs அரட்டை!

7 வருடங்களுக்கு முன்பு ஒருவரின்

குறிப்பாக இந்த கூகுள் எர்த் பயன்பாடு மூலம் உலகளவில் பல நெகழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் ஜப்பானில் ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது. அதாவது 7 வருடங்களுக்கு முன்பு ஒருவரின் தந்தை இறந்து போகிறார். இறந்து போன தனது தந்தையின் போட்டோவை கூகுள் எர்த் பயன்படுத்தும் போது மகன் அதை பார்த்திருக்கிறார்.

 ட்விட்டர் பக்கத்

மேலும் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பிதிவிட்டுள்ள அவர், இந்த கொரோனா தொற்றுநோய் காரணமாக எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் பெற்றோரின் வீட்டை கூகுள் எர்த் மூலம் சென்று பார்க்க முடிவு செய்து தேடி பார்த்திருக்கிறார். அப்படி காணும் போதுதான் சுமார் 7 வருடங்களுக்கு முன்பாக இறந்து போன தந்தையின் புகைப்படம் கூகுள் எர்த்தில் இருந்துள்ளது.

கனிவான தந்தை காத்துக் கொண்டிருந்தால்

அதில் இவருடைய தந்தை அங்கு நிற்பதையும் இவருடைய அம்மா வரும்வரை தந்தை காத்து கொண்டிருப்பதையும் இவரால் பார்க்க முடிகிறது. குறிப்பாக தாய் வரும்வரை அமைதியாக தன் கனிவான தந்தை காத்துக் கொண்டிருந்தார் என்று அவர் இந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 7 வருடங்களுக்கு

வெளிவந்த தகவலின்படி, 7 வருடங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுது கூகுள் எர்த் மூலம் அந்த தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அவர் மகன் தெரிவித்துள்ளார். அதில் இந்த நபரின் தாயும் தந்தையும் பதிவாகியுள்ளனர். தந்தையின் அந்த வீட்டை பார்க்கும் பொழுது இந்த புகைப்படம் காண்பித்ததால் இந்த நபர் இப்போது பரவசம் அடைந்து இருக்கிறார்.

வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவர் பதிவிட்டுள்ள இந்த ட்வீட் ஆனது உடனடியாக 6.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். கூகுள் எர்த்தில் இருந்து இந்த புகைப்படங்களை அகற்ற வேண்டாம் என்றும் இந்த நபர் கோரிக்கையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த கூகுள் எர்த் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Man Finds His Father's Image On Google Earth After, Who Passed Away 7 Years Ago: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X