டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.!
டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக அதிகளவு வீடியோ தினசரி பதிவிடப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் இந்த செயலியை அதிகளவில்
பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜதராபாத்தை சேர்ந்த இளைஞர்
இந்நிலையில் ஜதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.

புறநகர் பகுதியில் உள்ள ஏரியில்
தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஏரியில் நரசிம்மலு என்ற 24-வயது இளைஞர் தனது மைத்துனரான மற்றொரு இளைஞருடன் சேர்ந்து குளிக்கச் சென்றுள்ளார்.

தண்ணீரில் மூழ்கியபடி திணறியுள்ளார்
பின்பு இருவரும் குளிக்கும் போது டிக்டாக் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார், பின்னர் இருவரும் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாத நரசிம்மலு ஆழத்தில் சிக்கினார் அத்துடன் தண்ணீரில் மூழ்கியபடி திணறியுள்ளார்.

நீரில் மூழ்கி அவரது உடலை மீட்டனர்
இதைக்கண்ட அவரது மைத்துனர் உடனே ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்துள்ளார், ஆனால் அதற்குள் நரசிம்மலு தண்ணீருக்குள் மூழ்கிப்போனார். பின்பு மீட்புக்குழுவினர் நீரில் மூழ்கி அவரது உடலை மீட்டனர்.

நரசிம்மலு இறப்பதற்கு முன்னால்
மேலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது, நரசிம்மலு இறப்பதற்கு முன்னால் அவர்கள் எடுத்த டிக்டாக் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications