பெடல் அடித்தே உலகை வியப்பில் ஆழ்த்திய பிக்காஸோ 'இவர்' தான்.. மேப்ஸ் வரைபடத்தில் முரட்டு மீசைக்காரன்..

|

உலகையே தனது ஓவியக் கலையால் திரும்பிப் பார்க்கச் செய்த பிக்காஸோ பற்றி உலக மக்கள் அனைவருக்கும் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஓவிய தாள்களில் படம் வரைவது, சிற்பம் செதுக்குவது போன்ற பல கலைப்படைப்புகளை உருவாக்கிய பிக்காஸோ இப்போது உயிருடன் இருந்திருந்தால் இந்த கலைப்படைப்பை உருவாக்கி இருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், லண்டனில் உள்ள ஒரு நபர், கூகிள் நிறுவனமே திக்குமுக்காடும் வகையில் 120 கிமி அளவு பெரிய மீசைக்கார மனிதனின் உருவத்தை லண்டன் சாலை வழிகளில் சைக்கில் மூலம் பெடல் செய்து பயணித்து வரைந்திருக்கிறார்.

சைக்கிளில் பயணித்து உருவங்களை வரையும் ஜிபிஎஸ் கலைச்சிற்பங்கள்

சைக்கிளில் பயணித்து உருவங்களை வரையும் ஜிபிஎஸ் கலைச்சிற்பங்கள்

லண்டனைச் சேர்ந்த அந்தோனி ஹோய்ட் என்ற நபர் மேப்ஸ் இன் ஜிபிஎஸ் அம்சத்தைப் பயன்படுத்தி லண்டன் மேப்ஸ் வரைபடத்தில், சில வடிவியல் வடிவத்தை உருவாக்கி வருகிறார். இதுபோன்ற உருவங்களை ஒருவர் சைக்கிள் மூலம் பயணித்து உருவாக்க வேண்டுமென்றால் எவ்வளவு பெடல் அடித்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த வழிகளில் சென்றால் தான் இந்த உருவத்தை உருவாக்க முடியும் என்று கச்சிதமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டு அழகிய இராட்சச உருவங்களை இவர் மேப்ஸ் வரைபடத்தில் உருவாக்கியுள்ளார்.

இந்த மீசைக்காரர் உருவத்தை உருவாக்க அந்தோணி ஹோய்ட் எவ்வளவு தூரம் பயணித்தார் தெரியுமா?

இந்த மீசைக்காரர் உருவத்தை உருவாக்க அந்தோணி ஹோய்ட் எவ்வளவு தூரம் பயணித்தார் தெரியுமா?

இது முற்றிலும் புதுமையான முயற்சி, சமீபத்தில் இவர் வரைந்த வரைபடம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் இவர் ஒரு மீசையுள்ள மனிதனை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தைச் சாலை வழிகளில் பயணித்து உருவாக்க இவர் எவ்வளவு தூரம் சைக்கிளை மிதிக்க வேண்டியிருந்தது தெரியுமா? 120 கிமீ தூரம் வரை இவர் பெடல் செய்து இந்த மீசைக்காரர் படத்தை வரைந்துள்ளார். ஜிபிஎஸ் கலை என்பது ஒரு டிஜிட்டல் வரைபடத்தில் வடிவங்கள், குறியீடுகள் மற்றும் வடிவமைப்புகளை உருவாக்கும் சிக்கலான திறமையாகும். சமீப காலத்தில் இந்த கலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட "பாறை".. உண்மையில் இந்த பாறை என்னவென்று தெரியுமா? எதற்கு பயன்படும்?

லண்டன் தெருக்களில் பயணம் செய்தால் இப்படி உருவங்களை உருவாக்க முடியுமா?

லண்டன் தெருக்களில் பயணம் செய்தால் இப்படி உருவங்களை உருவாக்க முடியுமா?

இந்த புதிய முயற்சியின் மூலம் பல ஸ்மார்ட்போன் மற்றும் கண்காணிப்பு சாதன பயனர்கள் அவர்கள் வாழும் நகரங்களின் மேப்ஸ் வரைபடத்தில் கலைப்படைப்புகளை உருவாக்க முயன்றுள்ளனர். ஆனால், ஒரு சில திறமையானவர்களால் மட்டுமே உலகம் வியக்கும் சில நிரந்தர 'முத்திரை' வடிவங்களை உருவாக்க முடிந்தது. சிலர் மட்டுமே அந்தோனி ஹோய்ட் போன்ற சிறந்தவர்கள். 2019 ஆம் ஆண்டில், வரைபடத்தில் கலைமான் படத்தை உருவாக்க ஜிபிஎஸ் டிராக்கருடன் ஒன்பது மணி நேரம் வடக்கு லண்டனின் தெருக்களில் இவர் சைக்கிள் ஓட்டினார்.

"பெடலிங் பிக்காசோ" என்ற பெயர் கிடைக்கக் காரணம் என்ன?

ஒரு வருடம் கழித்து, அதே வரைபடத்தில் 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற கிறிஸ்துமஸ் வாழ்த்தை உருவாக்கி லண்டன் மக்களின் கவனத்தை ஈர்க்க துவங்கினர். பின்னர், அவரது மகத்தான மெய்நிகர் டூடுல்களுக்காக, அவர் "பெடலிங் பிக்காசோ" என்ற பெயரைப் பெற்றார். சமீபத்தில், லண்டன் முழுவதும் 120 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி பெரிய அளவில் மீசையுடன் கூடிய மனிதனின் மெய்நிகர் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார். ஆண்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் மாதத்தில் மீசைகளை வளர்ப்பதை உள்ளடக்கிய வருடாந்திர நிகழ்வான Movember க்கு அவர் தனது கலைப்படைப்பை அர்ப்பணித்தார்.

ஏசியை குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? இதனால் ஏசியில் கோளாறு ஏற்படுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..ஏசியை குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? இதனால் ஏசியில் கோளாறு ஏற்படுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

மனிதனின் உயிருக்காகப் பணம் திரட்டும் முயற்சி

மனிதனின் உயிருக்காகப் பணம் திரட்டும் முயற்சி

இம்முறை, 53 வயதான அவர், உடற்பயிற்சி வழி கண்காணிப்பு செயலியான ஸ்ட்ராவாவைப் பயன்படுத்தி கலைப்படைப்பை உருவாக்கச் சனிக்கிழமையன்று 12 மணிநேரம் சைக்கிள் ஓட்டினார் என்று கூறப்படுகிறது. "மன ஆரோக்கியத்தைச் சுற்றியுள்ள களங்கத்தை சவால் செய்ய" உருவப்படம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். அறிக்கைகளின்படி, 2020 ஆம் ஆண்டில் இழக்கப்படும் ஒவ்வொரு மனிதனின் உயிருக்கும் தலா ஒரு பவுண்டுக்கு சமமான 3925 பவுண்டுகளை திரட்டும் முயற்சியை நம்புவதாக ஹோயிட் கூறியுள்ளார்.

இந்த படத்தை உருவாக்கிய போது எழுந்த சிக்கல்கள்

இந்த படத்தை உருவாக்கிய போது எழுந்த சிக்கல்கள்

"இதுபோன்ற ஒன்றைச் செய்யும் மூவம்பருக்கு நான் விழிப்புணர்வையும் கொஞ்சம் பணத்தையும் திரட்ட முடிந்தால், அது அற்புதம். நான் பல ஆண்டுகளாக எனது சொந்த மன ஆரோக்கியத்துடன் சில போராட்டங்களைச் சந்தித்துள்ளேன், மேலும் ஒரு பொதுவான நபராக, நான் அதை எளிதாகத் திறக்கவில்லை, "என்று அவர் கூறியுள்ளார். அவர் தனது மீசைக்காரன் உருவத்தைத் திட்டமிட மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். சில சாலைகள் மூடப்பட்டதால் சைக்கிள் ஓட்டும் நாளில் விஷயங்கள் சிக்கலாயின என்றும் அவர் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!

அதிர்ஷ்டவசமாக இந்த வழிகளில் மட்டும் தடங்கல் இல்லை

அதிர்ஷ்டவசமாக இந்த வழிகளில் மட்டும் தடங்கல் இல்லை

இந்த முழு உருவப்படத்தையும் உருவாக்கத் தேவைப்பட்ட முழு விஷயத்தையும் திட்டமிடுவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகியுள்ளது. சில சாலைகள் மூடப்பட்டதால் உருவப்படத்தை உருவாக்கும் விஷயங்களில் சிக்கல் எழுந்துள்ளது. சில சாலைகள் பயணிக்கும் நேரங்களில் மூடப்பட்டிருந்தன, அதனால் நான் சில இடங்களில் திட்டமிட்ட பாதையை மாற்ற வேண்டியிருந்தது," என்று அவர் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, முக்கிய பிட்களான கண்கள், மூக்கு, வாய் மற்றும் மீசை திட்டமிட்டபடி சென்றது என்று கூறியுள்ளார். தலை முடி உருவாக்கிய பாதைகளில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Man draws moustached man on map by cycling 120 km for Movember : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X