ஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹாஷன் பரிதாப பலி.!

தெர்மல் ரன் அவே லித்தியம் பேட்டரிக்களுக்கு உள்ள பிரச்சனையை தெர்மல் ரன் அவே என்று அழைக்கின்றனர். இந்த வகை பேட்டரிகள் அதிகபடியான வெப்பம் அளிக்கும்.

|

ஸ்மார்ட்போன் அனைத்து இடங்களுக்கும் அவசியமாய் தேவைப்படுகிறது, ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். தற்சமயம் ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து தீ பிடித்ததில் அதிகாரி ஒருவர் உயிரழ்ந்த சம்பவம் மிகவும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹாஷன் பரிதாப பலி.!

மலேசிய நிதியமைச்சகத்துக்கு சொந்தமான கிராடில் பண்ட் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி நஸ்ரின் ஹாஷன் என்பவர் ஆவார். மேலும் அதிகாரி நஸ்ரின் ஹாஷன் ஹூவாய் மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்ரின் ஹாஷன்:

நஸ்ரின் ஹாஷன்:

இந்நிலையில் நேற்று படுக்கையறையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் நஸ்ரின் ஹாஷன், அந்த சமயம் ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறியது, இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு உயிரழந்தார். மேலும் படுக்கையில் அதிகமாக தீப்பற்றி எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  உறவினர்கள் :

உறவினர்கள் :

மேலும் அவரது உறவினர்கள் தெரிவித்தது என்னவென்றால் படுக்கையறையில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் போட்டிருந்தார், அது திடீரென வெடித்து அவர் மண்டையில் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர். பின்பு படுக்கையறை தீப்பிடித்து எரிந்துள்ளது,
ஆனால் தீப்பிடிக்கு முன்பே அவர் இறந்துவிட்டதால், அவரால் வெளிவர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட்போன் வெடித்து காயம் ஏற்பட்டு அதன் காரணமாக தான் உயிரிழந்துள்ளதாக அவரது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அக்டோபர் :

அக்டோபர் :

மேலும் 2016-ஆம் ஆண்டு ஆன்டாரியோ பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் உறங்கி கொண்டிருந்த போது தனது சாம்சங் கேலக்ஸி ஏஸ் போன் வெடித்து சிதறியதாக கூறியுள்ளார். இந்நிகழ்வு அக்டோபர் மாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

லித்தியம் பேட்டரி:

லித்தியம் பேட்டரி:

தெர்மல் ரன் அவே லித்தியம் பேட்டரிக்களுக்கு உள்ள பிரச்சனையை தெர்மல் ரன் அவே என்று அழைக்கின்றனர். இந்த வகை பேட்டரிகள் அதிகபடியான வெப்பம் அளிக்கும். இந்த பிரச்சனையால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பேட்டரிக்களை பாதுகாக்கவும், அதிக படியான சார்ஜிங்கை நிறுத்துவதற்கும் வழி முறைகளை கண்டுபிடித்துள்ளனர்.

தட்டையான பேட்டரி

தட்டையான பேட்டரி

தட்டையான பேட்டரிக்கள் தற்பொழுது தட்டையான மெல்லிய ஸ்மார்ட் போன்கள் வருவதால் அவைகளுக்கு ஏற்ற மெல்லிய பேட்டரிக்களும் வருகின்றன. இதனால் positive மற்றும் negative தட்டுகளை தனிதனியாக வைக்க இடம் இருப்பதில்லை. இவைகளுக்கு இடையில் ஏதாவது நுழைந்தால் பிரச்சனைதான். அதிலும் தேவையான தரம் இல்லாத பேட்டரி என்றால் முற்றிலும் மோசம் தான்.

இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம் :

இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம் :

இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் போனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கையேட்டின் உதவி கொண்டு வடிவமைக்கின்றனர். ஆனால் சிலர் பணத்தை சேமிக்க என்று கூறி பேட்டரி அதிகமாக வெப்பம் ஏறினால் சர்க்யூட்டை செயல் இழக்கம் செய்யும் fuseஐ பொருத்துவதில்லை. எனவே இரவு முழுவதும் சார்ஜில் போனை வைப்பவர்களுக்கு ஆபத்தில் முடியும்.

ஒரிஜினல் பேட்டரி:

ஒரிஜினல் பேட்டரி:

ஒரிஜினல் பேட்டரியை பயன்படுத்தவும் தயாரிப்பாளர்கள் போனுடன் வழங்கும் பேட்டரியை பயன்படுத்துவதை பழக்கமாக கொள்ளுங்கள். விலை கம்மி என்று நினைத்து கம்பனி அல்லாத மற்ற பேட்டரியை பயன்படுத்தினால் ஆபத்து உங்களுக்கு தான்.

Best Mobiles in India

English summary
Man dies after his smartphone explodes and catches fire in his bedroom : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X