ஸ்மார்ட் டிவி மீது அமர்ந்த கொசு.. உணர்ச்சிவசப்பட்டு அடிக்க சென்ற நபர்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா?
நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை (Smart TV) அறிமுகம் செய்கின்றன. அதுவும் 65 இன்ச் முதல் 100 இன்ச் அளவில் ஸ்மார்ட் டிவிகள் அதிகம் வரத் தொடங்கிவிட்டன. இதுபோன்ற பெரிய ஸ்மாரட் டிவிகளை தான் வாங்கத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக இதுபோன்ற பெரிய ஸ்மார்ட் டிவிகள் சற்று உயர்வான விலையில் தான் விற்பனைக்கு வருகின்றன. எனவே இதுபோன்ற அதிக பணம் கொடுத்து வாங்கும் டிவியை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் டிவியின் திரை மீது அமர்ந்திருக்கும் கொசுவை அடிக்க சென்ற நபர். அந்த லட்ச ரூபாய் டிவியை முழுவதும் சேதப்படுத்திவிட்டார். தற்போது இந்த வீடியோ தான் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.

news18 இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, அப்பா, மகன் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருக்கும் போது, கொசு ஒன்று அந்த டிவியின் மீது அமர்ந்து அவர்களைத் தொல்லை செய்து கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் டிவியின் திரையின் மீது அமர்ந்திருக்கும் கொசுவை எப்படியாவது அடிக்க வேண்டும் என அந்த அப்பா களத்தில் இறங்கிவிட்டார்.
அதாவது ஸ்ப்ரே அல்லது கொசுவலை என்று இல்லாமல் நேரடியாக அட்டாக் மோட்டிற்குச் சென்றுவிட்டார். அதாவது அவரிடம் உள்ள எலக்ட்ரிக் பேட்டை கொண்டு மெதுவாக டிவி மீது அமர்ந்திருக்கும் கொசுவை கொள்வதற்காக டிவியின் திரை மீது பேட்டை மீது வைக்கிறார். அவ்வளவு தான் உடனே ஷார்ட் சர்க்யூட் போல ஏற்பட்டு டிவியில் சிறிய அளவிலான கருப்பு கோடுகள் மெதுவாகத் தோன்றி அவை திரை முழுவதும் பரவி டிவி முழுவதுமாக அணைந்து விடுகிறது.
அதன்பின்னர் அவரின் மகன் இவரைப் பாவமாகப் பார்ப்பதும், இவர் அந்த மகனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அங்கிருந்து நழுவ முயற்சி செய்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் டிவியின் திரையில் எலக்ட்ரிக் பேட் போன்ற எந்த ஒரு சாதனத்தை வைக்க கூடாது. இப்படிச் செய்தால் டிவி சேதம் அடையும் என்பதைக் கவனத்தில் கொள்க.
அதேபோல் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவியை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால், அது விரைவில் பழுதடைந்துவிடும். குறிப்பாக டிவியின் திரையை ஈரமான துணியால் துடைக்க கூடாது. அதேபோல் ரசாயனங்கள் கலந்த திரவங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் டிவிகளை சுந்தம் செய்ய கூடாது. காரணம் என்னவென்றால் இந்த ரசாயனம் கலந்த பொருட்கள் டிவியின் திரையினை சேதப்படுத்தும்.
ஸ்மார்ட் டிவியை கடினமான ப்ரெஷ்கள் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கீரல் விழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இதுதவிர டிவியின் பிரைட்னஸ் அம்சத்தையும் குறைக்கும். எனவே உங்கள் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை லேசான ஈரப்பதத்துடன் வைத்து துடைக்க வேண்டும். குறிப்பாக மிகவும் மென்மையாக தான் துடைக்க வேண்டும், அழுத்தி துடைக்க கூடாது. மேலும் டிவியின் இதர பகங்கள் மற்றும் போர்டுகளில் இருக்கும் தூசியினை நீங்க ஏர் ப்ளோவர் பயன்படுத்தலாம்.
டிவியின் திரையில் (TV Screen) இருக்கும் கறைகளை நீக்க ஸ்கிரீன் கிளீனர் பயன்படுத்தலாம். அதேபோல் ஸ்மார்ட் டிவியில் உள்ள கறைகளை நீக்க விரல் நகங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இதனால் திரையில் கீரல்கள் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் பயன்படுத்துங்கள்.
தண்ணீரை நேரடியாக ஸ்மார்ட் டிவியின் திரையில் தெளிக்க வேண்டாம். ஏனெனில், தண்ணீர் டிவியின் உள்ளே சென்று, அதை சேதப்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்க. அதேபோல் முகம் துடைக்கும் துண்டுகள், நியூஸ் பேப்பர், காட்டன் துணிகள் அல்லது பாலிஸ்டர் துணிகளைக் கொண்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கவே கூடாது.
video courtesy: bhala_studios


Click it and Unblock the Notifications








