விபத்து ஏற்பட்டு சுயநினைவை இழந்த நபரை காப்பற்றிய ஆப்பிள் வாட்ச்.!
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் செய்யும் ஆப்பிள் ஐபோன், வாட்ச்,லேப்டாப், டெஸ்க்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு தனித்துவமான மென்பொருள் அமைக்கப்படுகிறது.

சைட் ஸ்டேட் பார்க்
இந்நிலையில் அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர் காபே பர்தெத். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் ரிவர்ஸ் சைட் ஸ்டேட் பார்க் எனும் பகுதியில் சந்திக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கபே பர்தெத்திற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தது
அதை திறந்து படித்தபோது கபே பர்தெத்தின் தந்தை வரும் வழியில் பெரும் விபத்தை சந்தித்திருப்பதாகவும், அவர்தனது சுயநினைவை இழந்திருப்பதாகவும் குறுஞ்செய்தி வந்திருக்கிறது. கூடவே விபத்து நடந்த இடத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தது. உடனடியாக, அந்த குறுஞ்செய்தி வந்திருந்த இடத்தை நோக்கி கபே பர்தெத் விரைந்தார்.

அவசர சிகிச்சை சேவை பிரிவு
ஆனால் விபத்து நடற்த இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு அவரது தந்தை இல்லை. மேலும் கபே பர்தத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பியது போலவே, அவசர சிகிச்சை சேவை பிரிவுக்கு குறுஞ்செய்தி சென்றதன் அடிப்படையில்அவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளது அவசர சிகிச்சை பிரிவு.

தற்போது உடல் நலம் தேறிவருகிறார்
கூடவே அவரது பைக்கையும் மீட்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது தீயணைப்பு துறை, சுயநினைவை இழந்திருக்க கபே பர்தெத்தின் தந்தை தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது உடல் நலம் தேறிவருகிறார்.

ஆப்பிள் வாட்ச்
குறிப்பாக இத்தனை வேலைகளும் நடக்க மனிதர்கள் யாரும் காரணமில்லை. மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது முதல், மருத்துவக் குழுவினர் மீட்டது வரை அத்தனைக்கும் காரணம் அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் தான்.

911 என்ற அவசர எண்
விபத்து ஏற்பட்டதும் வாட்ச் சேதமடைய, அதில் உள்ள சென்சார்கள் விபத்து நடந்திருப்பதை உணர்ந்து அவசரகாலதொடர்புக்கென குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களுக்கு தகவலை அனுப்பியதோடு, 911 என்ற அவசர எண்ணுக்கு தகவல்அனுப்பி அவரை மீட்க உதவியுள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் அனைத்தும் அரைமணி நேர இடைவெளிக்குள்ளாகநடந்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications