ரூ.783-க்கு விலை போனது கூகுள்..!

|

உலகின் மிகப்பெரிய தேடு பொறி நிறுவனமான கூகுளின் டோமைன் பெயரை (Domain Name) வெறும் 12 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார் சன்மே வெட் (Sanmey Ved) என்பவர். கூகுளின் புதிய டொமைன் விற்பனை சேவையில் பிரபலமான டொமைன் பெயரை தேடும் போது அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

வெளியானது : பாதுகாக்கப்பட்ட கூகுள் 'ரகசியங்கள்'..!

ரூ.783-க்கு விலை போனது கூகுள்..!

கூகுள்.காம் என்ற டொமைன் பெயர் அவர் தேடிய பட்டியலில் இருக்க, முதலில் அவர் அதை ஏதோ 'எரர்' (Error) என்று நினைத்துள்ளார். பின் அவர் அந்த டொமைன்க்கு பணம் செலுத்த அவர் கிரெடிட் கார்ட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே அவர் நிலைமையை உணர்ந்துள்ளார், அதாவது உலகின் மாபெரும் தேடு பொறியான கூகுள் டொமைனை அவர் வெறும் 800 ரூபாய் கொடுத்து உரிமைப்படுத்தி உள்ளார்.

கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

ரூ.783-க்கு விலை போனது கூகுள்..!

அதற்கு சான்றாய், டொமைன் உரிமை பெற்றதாக அவருக்கு இரண்டு மெயில்கள் வந்துள்ளன. அதை தொடர்ந்து சில நிமிடங்களில் உங்கள் 'ஆர்டர் கேன்சல்' செய்யப்பட்டது என்று கூகுளிடம் இருந்து மெயில் வந்துள்ளது.

கொலை சாட்சியான - கூகுள் போட்டோ..!

சன்மே வெட், ஒரு முன்னாள் கூகுள் நிறுவன ஊழியர் என்பதும், இதே போல் ஒரு சம்பவம் கடந்த 2003-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
A man has bought Google.com - the domain name for the world's most popular website - for just Rs.800/-

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X