என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?

|

சமூக வலைத்தளத்தில் வேடிக்கையான பதிவுகளுக்குப் பஞ்சமே இல்லை. அதிலும் எதிர்பாராமல் சிக்கும் பதிவுகளின் ரீச் தான் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு வினோதமான பதிவு தான் இப்பொழுது இணையத்தில் வேடிக்கையாக மாறி, வைரல் ஆகி வருகிறது. நாமெல்லாம், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் எதாவது கோளாறு என்றால் சர்விஸ் செய்யும் கடைக்காரரிடம் கொடுத்து நல்லபடியாகச் சரி செய்து கொடுங்கள் என்று தானே கேட்போம்.

ஐபோனை சரி செய்து மட்டும் கொடுக்காதீர்கள் ப்ளீஸ்..

ஐபோனை சரி செய்து மட்டும் கொடுக்காதீர்கள் ப்ளீஸ்..

ஆனால், இங்கு ஒரு நபர் தனது ஐபோனை சரி செய்து மட்டும் கொடுக்காதீர்கள் ப்ளீஸ் என்று கெஞ்சி லஞ்சமும் கொடுத்துள்ளார்.

இதற்காக அவர் தெரிவித்துள்ள காரணம் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக நெட்டிசன்ஸ்களை சிரிக்க வைத்துள்ளது. இவர் தனது மனைவிக்கு பயந்து, உடைந்த ஐபோனுக்குள் ஒரு அசாதாரண கோரிக்கையைப் பென்சிலால் எழுதி மறைத்து வைத்துள்ளார். பழுதுபார்க்கும் கடை ஊழியர் ஐபோனை சரி செய்யத் திறந்த போது அதில் ஒரு துண்டு சீட்டுடன் பணம் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.

ஐபோனுக்குள் அசாதாரணமான கோரிக்கையுடன் துண்டு சீட்டு

ஐபோனுக்குள் அசாதாரணமான கோரிக்கையுடன் துண்டு சீட்டு

பழுதான அந்த ஐபோனிற்கு சொந்தக்காரர் தனது தொலைபேசியை சரிசெய்ய வேண்டாம் என்று துண்டு சீட்டு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐபோன் பழுதுபார்க்கும் கடையில் பணியாற்றும் தொழிலாளி, இப்படி ஒரு அசாதாரண கோரிக்கையுடன் உடைந்த ஐபோனை கண்டு ஆச்சரியப்பட்டார். அந்த நபர் தனது ஐபோனை சரிசெய்ய வேண்டாம் என்று பழுதுபார்க்கும் நபரிடம் அன்பாகக் கெஞ்சிக் கேட்பதுபோல் துண்டு சீட்டில் எழுதியுள்ளார். டிக்டாக்கில் இடுகையிடப்பட்ட ஒரு வீடியோ, ஐபோனின் உடைந்த திரையைக் காட்டியுள்ளது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

போனை சரி செய்யாமல் இருக்க $ 200 டாலர் அன்பளிப்பு

போனை சரி செய்யாமல் இருக்க $ 200 டாலர் அன்பளிப்பு

ஐபோனின் பின்பகுதியைத் திறக்கும்போது, போனின் உரிமையாளர் தனது கையால் எழுதப்பட்ட குறிப்பையும் அதனுடன் உள்ளே சில பணத்தையும் வைத்துள்ளது வீடியோ காட்டுகிறது. அதில், "தயவுசெய்து என் போனை சரிசெய்ய வேண்டாம்! சரி செய்தால் என் மனைவி என்னைக் கொன்றுவிடுவாள். உங்களுக்காக இந்த $ 200 வைத்திருக்கிறேன். நன்றி", என்று அந்த துண்டு சீட்டில் எழுதப்பட்டுள்ளது. துண்டு சீட்டின் கீழ், 200 டாலர் ரொக்கம் அழகாக மடிக்கப்பட்டு ஐபோனுக்குள் வைக்கப்பட்டிருந்தது.

வைரல் ஆனா வீடியோ பதிவு

வைரல் ஆனா வீடியோ பதிவு

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஐபோன் கடை ஊழியர் இதை வீடியோ பதிவாக எடுத்துள்ளார். அதில், "என் வாடிக்கையாளர்கள் அவர்களின் தோழிகளை ஏமாற்றுவதை நான் விரும்புகிறேன்", என்று சிரிக்கும் ஈமோஜி உடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி, 12.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸை பெற்றுள்ளது. சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும், கிட்டத்தட்ட 10,000 கமெண்ட்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

கேளிக்கையாக கமெண்ட்

கேளிக்கையாக கமெண்ட்

அதில் ஒரு பயனர், "பணத்தை வைத்திகொள்ளுங்கள், ஆனால் போனின் சொந்தக்காரர் ஏன் இவ்வளவு பீதியடைந்தார் என்பதைப் பார்க்க அதைச் சரிசெய்யவும்" என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், "பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதை சரிசெய்து, மனைவியிடம் குறிப்பைக் காட்டி இன்னும் கூடுதலாகப் பணம் சம்பாதிக்கவும்" என்று கேளிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.

மனைவிக்குப் பயந்த கணவன் என்ன ஆனார்?

மனைவிக்குப் பயந்த கணவன் என்ன ஆனார்?

இப்படிப் பல வினோதமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இப்போது போனின் உரிமையாளர் அவரின் மனைவிக்குப் பயந்து எங்குத் தலைமறைவாகி இருக்கிறார் என்பது தான் தெரியவில்லை. அதேபோல், அப்படி அந்த போனில் இருந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அவரின் மனைவிக்கு இந்த விவகாரம் தெரியவந்து என்ன நடந்தது என்பதும் மர்மமாக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Man Asks Repair Shop To Not Fix His iPhone and Hides Bribe Inside It Went Viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X