100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்!

|

100-க்கும் அதிகமான பெண்களுக்கு போன் செய்து ஆபாசமாக பேசியும், மிரட்டல் விடுத்தும் வந்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போனில் அறிமுகம்

பல்வேறு சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போனில் அறிமுகம்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம். பல்வேறு சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதே அளவிலான ஆபத்தும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. முடிந்தளவு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் அந்த பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் மர்ம நபர் ஒருவர் தனக்கு அடிக்கடி போன் செய்து தொல்லைக் கொடுப்பதாகவும், ஆபாசமாக பேசுவதோடு தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும் இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தார்.

செல்போன் எண்ணின் மூலம் ஆய்வு

செல்போன் எண்ணின் மூலம் ஆய்வு

இந்த புகாரை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎஸ்பி உத்தரவிட புகார் குறித்து விசாரிக்க சைபர் க்ரைம் போலீஸ் உதவியோடு அந்த பகுதி போலீஸார் தனிப்படை அமைத்து செல்போன் எண்ணின் மூலம் ஆய்வை தொடங்கியுள்ளனர்.

Ray-Ban உடன் கூட்டு சேர்ந்து பேஸ்புக் உருவாக்கும் ஸ்மார்ட் கிளாஸ் எப்பொழுது வெளிவரும்!Ray-Ban உடன் கூட்டு சேர்ந்து பேஸ்புக் உருவாக்கும் ஸ்மார்ட் கிளாஸ் எப்பொழுது வெளிவரும்!

100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாச  பேச்சு

100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாச பேச்சு

செல்போன் எண் வைத்து ஆய்வு மேற்கொண்ட போது, சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற 37 வயது இளைஞர் சிக்கினார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இதே எண்ணில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.

கல்லூரி மாணவிகளே டார்கெட்

கல்லூரி மாணவிகளே டார்கெட்

இதுகுறித்து போலீஸார் கூறிய தகவலின்படி, கார்த்திகேயன் அவரது நண்பரின் பெயரில் சிம் வாங்கியதாகவும், 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். கார்த்திகேயன் அதிகப்படியாக கல்லூரி மாணவிகளையே டார்கெட் வைத்து பேசியுள்ளார்.

கார்த்திகேயனை கைது செய்த போலீஸார்

கார்த்திகேயனை கைது செய்த போலீஸார்

இதையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீஸார் பெண் கொடுமை தடுப்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வேறு பெண்கள் யாராவது நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்களா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Man arrested for Talkobscene remarks on the phone to more than 100 women

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X