Home
News

கோவர்தன மலை கற்களை ஆன்லைனில் விற்க விளம்பரம்: சிக்கிய சென்னை நபர்.!

இப்போது ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதால் குறிப்பிட்ட சலுகை மற்றும் நேரம் மிச்சமாகும் என்பதால் அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

மிகவும் புகழ்பெற்ற கோவர்தன மலை

மிகவும் புகழ்பெற்ற கோவர்தன மலை

இந்த நிலையில் மிகவும் புகழ்பெற்ற கோவர்தன மலை கற்களை ஆன்லைனில் விற்க விளம்பரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவர்தன மலை அமைந்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

ரூ.5175-க்கு விற்பனை

ரூ.5175-க்கு விற்பனை

அண்மையில் இந்த புகழ்பெற்ற கோவர்தன மலை கற்களை வீட்டில் வைத்து வழிபட்டால் மிகவும் நல்லது, இதன் மூலம் பல நன்மைகள் நடக்கும் என்று கூறி ஆன்லைனில் தளமான இந்திய மார்ட் தளத்தில் ரூ.5175-க்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 சமூக ஆர்வலர் கேஷவ் முக்யா

மேலும் மதுரா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் கேஷவ் முக்யா என்பவர் இதுதொடர்பாக கோவர்தனா காவர் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பின்பு இந்திய மார்ட் ஆன்லைன் விற்பனை தளத்தின் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பம் குறித்து விளக்கம் கொடுத்த இந்தியா மார்ட்

அதன்பின்னர் இந்த சம்பம் குறித்து விளக்கம் கொடுத்த இந்தியா மார்ட் நிறுவனம்,பொருட்களை விற்கவும், வாங்கவும் முயற்சி செய்பவர்களுக்கு பாலமாக மட்டுமே தங்களது நிறுவனம் செயல்படுதவதாக தெரிவித்தது. பின்பு இதுபோன்ற விற்பனையில் இந்தியா மார்ட் ஈடுபடாது என்றும், இதற்கும் தங்களது நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் கொடுத்தது.

கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் பிரேம்குமார்

கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் பிரேம்குமார்

அடுத்து அந்த இணையதளத்தில் கோவர்தன கற்களை விற்க விளம்பரம் செய்த நபரின் விவரங்களை போலீசாரிடம் இந்தியா மார்ட் நிறுவனம் ஒப்படைத்தது. அந்த விவரங்களின்படி சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் பிரேம்குமார் (42) என்பவர் விளம்பரம் செய்திருப்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அதிகாரிகளின் உதவி

பின்னர் சென்னை வந்த உத்தரபிரதேச போலீசார், அசோக் நகர் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் பிரேம்குமாரை கைது செய்து உத்தரபிரதேசம் அழைத்து சென்றனர். மேலும் இவர் உண்மையிலேயே கோவர்தன கற்களை வாங்கி விற்பனை செய்கிறாரா அல்லது போலியான கற்களை விற்று மோசடியில் ஈடுபட்டரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Source: newindianexpress

File images

Best Mobiles in India

English summary
Man arrested for selling Govardhana Hill stones online: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X