ட்ரூ காலரை பயன்படுத்தி பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் கைது: எப்படி தெரியுமா?

|

புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் நமது வேலைகள் சுலபமாக முடியும், இருந்தபோதிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அதிக கவனம் இருக்க வேண்டும், இல்லையேன்றால் அதுவே நமக்கு மிகப்பெரிய தொல்லையாக மாறிவிடும்.

ட்ரூ காலர் (True caller) செயலி

ட்ரூ காலர் (True caller) செயலி

அதன்படி ட்ரூ காலர் (True caller) செயலி மூலம் பெண்கள் நம்பரை எடுத்து அவர்களிடம் அன்பாக பேசிகாதல் வலையில் சிக்கவைத்து, பின்பு சித்து விளையாட்டை காட்டிய ஒருவன் போலீசாரிடம் சிக்கியுள்ளான்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, கடந்தசில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து காதல் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. ஆனால்அந்த கல்லூரி மாணவி பெரிதாக பொருட்படுத்தாததால், தொடர்ந்து அந்த பெண்ணுக்கு காதல் குறித்து செய்திகள் அந்த எண்ணில் அடிக்கடி இருந்து வந்துள்ளன.

கேட்டால் கிடைக்கும்: Google Assistant எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், என்ன பயன்?கேட்டால் கிடைக்கும்: Google Assistant எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், என்ன பயன்?

 அனுப்ப வேண்டாம்

ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரமடைந்த அந்த மாணவி அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு இன்னும்சிறுது காலத்தில் திருமணமாகபோகிறது, ஆகையால் இதைப்போன்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

 காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

அதையும்பொருட்படுத்தாமல் அந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்திகள் வருவது நின்று, ஆபாச படங்கள் வரதொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தரப்பில் திருப்பத்தூர் காவல் நிலையத்தில்புகார் அளிக்கப்பட்டது.

வினோத்

வினோத்

மேலும் புகாரை தொடர்ந்து அந்த எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார்,அந்த எண் நெல்லைமாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத்என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

பின்பு வினோத் குறித்த தகவல்களை சேகரித்த போலீசார், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மும்மூர்த்தி நகரில்இருப்பதை கண்டறிந்தனர். உடனே அவனை கைது செய்தனர், அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் பலஉண்மைகள் வெளிவந்தது.

 குத்துமதிப்பாக 10இலக்க மொபைல் எண்

குத்துமதிப்பாக 10இலக்க மொபைல் எண்

அதாவது வினோத் குத்துமதிப்பாக 10இலக்க மொபைல் எண்களை ட்ரூ காலரில் பதிவிட்டு, அதில் பெண்கள் பெயர்எதுவும் வந்தால் உடனடியாக போனில் அந்த எண்ணை சேமித்து வைத்துக் கொண்டு அவர்களை காதல் வலையில்
விழவைப்பதையே வேலையாக வைத்துள்ளான்.

தவறாக நடந்துள்ளான்.

அப்படி வலையில் விழும் பெண்களுக்கு ஆபாசமான படங்கள், செய்திகள் ஆகியவற்றை பகிர்வது,அது குறித்துஉரையாடுவது என அவனுக்கு தெரிந்த வித்தைகளை காண்பித்து வந்துள்ளதோடு, அவனிடம் நெருங்கிபழகும் பெண்களோடு தவறாக நடந்துள்ளான்.

சுமார் 50-க்கு மேற்பேட்ட பெண்கள்

இதனால் சுமார் 50-க்கு மேற்பேட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் போலீசார் முன்பின்தெரியாத நபரிடம் குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ வந்தால் கண்டிப்பாக அந்தஎண்ணை பெண்கள் ப்ளாக் செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News Source: polimernews

Most Read Articles
Best Mobiles in India

English summary
Man arrested for disturbing women using True caller : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X