Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி!

|

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பெண்களுடன் டேட்டிங் செய்வதற்கு ஒருவர் பணம் வசூலித்து ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார்.

அழகான பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட மர்மநபர்

அழகான பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட மர்மநபர்

அந்த புகாரில், ஆன்லைன் ஆப்பின் மூலம் அழகான பெண்களின் புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் வெளியிட்டு, அவர்களுடன் நெருக்கமாக பேசுவதற்கு சாட் செய்வதற்கு முன்பணத்தை Google pay மூலம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால் எந்த பெண்ணும் கால் பண்ணவில்லை என புகார்

ஆனால் எந்த பெண்ணும் கால் பண்ணவில்லை என புகார்

அவரின் வார்த்தையை நம்பி பணம் செலுத்திய பின்னர், அந்த இளைஞர் கூறியபடி எந்த பெண்களும் தொடர்பு கொள்ளவில்லை என கூறியுள்ளார். அதன்பின்பே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக, அந்த இளைஞர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்

தன் மீதே போலீஸில் புகார் கொடுப்பேன் என மிரட்டுகிறார்

தன் மீதே போலீஸில் புகார் கொடுப்பேன் என மிரட்டுகிறார்

மேலும் இது குறித்த ஆன்லைனில் பணம் வசூலித்த மர்ம நபரிடம் கேட்டபோது அவர் தன் மீதே போலீஸில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டி வருவதாகவும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மயிலாப்பூர் காவல்துறையினர் சார்பில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Google pay-யின் நம்பரை வைத்து ஆய்வு

Google pay-யின் நம்பரை வைத்து ஆய்வு

இந்த விசாரணையில், Google pay-யின் மூலம் பணம் செலுத்திய நம்பரை வைத்து ஆய்வு மேற்கொண்ட போது அவர் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ரீகன் என்பவரே இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பணகுடி சென்ற போலீஸார் ரீகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 திருநெல்வேலியில் கைது செய்யப்பட்ட நபர்

திருநெல்வேலியில் கைது செய்யப்பட்ட நபர்

திருநெல்வேலியில் கைது செய்த ரீகனை சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணை பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

டேட்டிங் செல்ல முன்பணம் செலுத்துமாறு கூறி மோசடி

டேட்டிங் செல்ல முன்பணம் செலுத்துமாறு கூறி மோசடி

சமூகவலைதளங்களில் இருக்கும் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதை லொகோண்ட என்ற ஆன்லைன் ஆப்பில் வெளியிட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இந்த பெண்களுடன் டேட்டிங் சென்று ஜாலியாக இருக்க வேண்டுமானால், முன்பணம் செலுத்தமாறுக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?

ஆசை வார்த்தையால் பலர் பணம் செலுத்தியுள்ளனர்

ஆசை வார்த்தையால் பலர் பணம் செலுத்தியுள்ளனர்

இந்த நபரின் ஆசை வார்த்தையில் விழுந்து பலர் பணம் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இவரால் ஏமாற்றப்பட்ட பலரும் இவரின் மிரட்டலுக்கு பயந்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.இதேபோல் இவ்வாறு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்தும், கைது செய்யப்பட்ட ரீகனிடம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Man arrested for defrauding lakhs of rupees online with dating application

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X