Home
News

நிஜ துப்பாக்கி பயன்படுத்தி டிக்டாக் வீடியோ: இளைஞர் பலி.! எங்கு தெரியுமா?

உடனடியாக செய்வதறியாமல் சல்மானின் உறவினர் வீட்டுக்குச் சென்ற நண்பர்கள் உறவினர்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு மருத்துவமனைக்கு சல்மானை தூக்கிச் சென்றுள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்று டிக்டாக் செயலியையும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள்
கோடிக்கணக்கில் உள்ளனர்.

நிஜ துப்பாக்கி பயன்படுத்தி டிக்டாக் வீடியோ: இளைஞர் பலி.!

இந்த செயலியைப் பயன்படுத்தி ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்த காட்டுவது போன்றவற்றை; செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

19வயது இளைஞர்

19வயது இளைஞர்

நேற்று டெல்லியில் 19வயது இளைஞர் மற்றும் அவரது நண்பரும் நாட்டுதுப்பாக்கியை வைத்து டிக் டாக் வீடியோ செய்யும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

இந்தியா கேட்

இந்தியா கேட்

நேற்று இரவு சல்மான் என்ற இளைஞரும், அவரது நண்பர்கள் 2பேரும் காரில் இந்தியா கேட் பகுதியை பார்வையிட சென்றுள்ளனர். இந்தியா கேட் பகுதியை பார்வையிட்டுவிட்டு திரும்பி வருகையில் காரில் அமர்ந்தபடியே டிக்டாக் வீடியோ செய்துள்ளனர்.

சுடுவது போல நடித்துள்ளார்

சுடுவது போல நடித்துள்ளார்

அந்தசமயம் நாட்டுத்துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு சல்மானை நோக்கி அவரது நண்பர் டிக்டாக் வீடீயோவுக்காக சுடுவது போல நடித்துள்ளார். ஆனால் துப்பாக்கி தவறுதலாக வெடித்து சல்மான் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனைக்கு சல்மானை தூக்கிச் சென்றுள்ளனர்

மருத்துவமனைக்கு சல்மானை தூக்கிச் சென்றுள்ளனர்

உடனடியாக செய்வதறியாமல் சல்மானின் உறவினர் வீட்டுக்குச் சென்ற நண்பர்கள் உறவினர்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு
மருத்துவமனைக்கு சல்மானை தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சல்மான ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 கொலை வழக்கு பதிவு செய்த போலீசார்

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார்

மேலும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் டிக்டாக் வீடியோ எடுத்த சல்மானின் நண்பர்கள் இருவரையும், ரத்தக்கறையான ஆடையை மாற்ற உதவிய மற்றொரு நண்பர் என மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Man accidentally kills 19-year-old friend while filming video for TikTok: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X