மால்வேர் : பிஎஸ்என்எல் ஆயிரக்கணக்கான பிராட்பேண்ட் மோடம்கள் பாதிப்பு.

By Prakash
|

இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பிஎஸ்என்எல் மோடம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை மலிவான விலையில் கிடைப்பதால் அதிக மக்கள் இந்த பிராட்பேண்ட் மோடம்களை விரும்புகின்றனர், இப்போது தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகமாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் வேகம் குறைந்துள்ளது,அதன்பின் சில இடங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த அறிவித்த அறிக்கையின் படி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் யூசர் மற்றும் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியது, இருந்தபோதிலும் தற்போது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் அதிகமாக மால்வேர் தாக்குதலை சந்தித்துள்ளது.

60,000 பிஎஸ்என்எல் மோடம்கள்:

60,000 பிஎஸ்என்எல் மோடம்கள்:

தென்னிந்தியாவில் இதுவரை 60,000 பிஎஸ்என்எல் மோடம்கள் மால்வேர் பாதிப்பினால் சிக்கியுள்ளது, மேலும் ஐதராபாத் பிஎஸ்என்எல் சார்ந்த அதிகாரிகள் 45சதவிகிதம் மால்வேர் பாதிப்பினால் இன்டர்நெட் வசதி செயல்படாமல் உள்ளதுஎனத் தெரிவித்துள்ளனர்.

புகார் எண்:

புகார் எண்:

தற்சமயம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை 040-23231504 என்ற எண்ணிறக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கமுடியும், மேலும் இந்த சேவை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவாஸ்தவா:

ஸ்ரீவாஸ்தவா:

இந்த மால்வேர் தாக்குதல் விரைவில் சரிசெய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் தலைவர் ஸ்ரீவாஸ்தவா பிடிஐ தகவல் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ :

ரிலையன்ஸ் ஜியோ :

கடந்த மாதம் தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்கள், பெயர்கள் மற்றும் ஆதார் எண்கள் உள்ளிட்ட அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டன. தற்போது பிஎஸ்என்எல் சேவையில் 60,000 மோடம்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 கர்நாடகா:

கர்நாடகா:

இந்த மால்வேர் பாதிப்பு கர்நாடகா மாநிலத்தில் அதிகமாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது, மேலும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவை மையங்களுக்கு சென்று தங்களது புகார்களை கூறமுடியும்.

ரீபூட்:

ரீபூட்:

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது மோடம் தளத்திற்க்கு சென்று ரீபூட் செய்யமுடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Malware attacks BSNL broadband services nationwide ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X