இவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

மலேஷியா: முகமது ஆடில் அஸாஹார் ஜஹரின் 16 வயது சிறுவன், தனது படுக்கையின் அருகில் காதுகள் எரிந்து தரையில் பிணமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

|

மலேஷியா: முகமது ஆடில் அஸாஹார் ஜஹரின் 16 வயது சிறுவன், தனது படுக்கையின் அருகில் காதுகள் எரிந்து தரையில் பிணமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

இவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

<strong>நிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.! இஸ்ரோவுக்கு சவால்.!</strong>நிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.! இஸ்ரோவுக்கு சவால்.!

முகமத் இரவு தூங்கும் பொழுது காதில் ஹெட்போன்ஸ் அணிந்து மொபைல் போனை சார்ஜில் வைத்ததினால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதென்று தற்பொழுது தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்

மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்

உறங்கும் பொழுது தலையணை அருகில் மொபைல் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தியுள்ளார். காதில் ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு பாடல் கேட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

காதுகள் கருகி

காதுகள் கருகி

காலை முகமதின் அறைக்குள் நுழைந்த அவரின் தாய், முகமத் தரையில் காதுகள் கருகி இரத்தம் கசிந்த நிலையில் தரையில் அசைவுகள் இல்லாமல் கிடந்த முகம்மதை பார்த்து அதிர்ந்து போனார். காரணம் ஏதும் தெரியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு முகம்மதை கொண்டு சென்றுள்ளனர்.

ஸ்மார்ட்போன் தான் காரணம் உறுதி:

ஸ்மார்ட்போன் தான் காரணம் உறுதி:

மருத்தவ பரிசோதனையில் அவர் உயிர் இழந்துவிட்டார் எனவும், உடலில் வேறு ஏதும் காயங்கள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மின்சாரம் தாக்கி தன உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ஜிங் இல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதீர்கள்:

சார்ஜிங் இல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதீர்கள்:

ஸ்மார்ட்போன் பயனர்கள் கண்டிப்பாக அவர்களின் போன்களை உறங்கும் பொழுது அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், சார்ஜிங் இல் உள்ள பொழுது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுரைக்கப்படுகிறது.

உங்களுக்கான ஹெட்போன்களில் எது நல்லது.? எது மிகவும் தீங்கானது.?

உங்களுக்கான ஹெட்போன்களில் எது நல்லது.? எது மிகவும் தீங்கானது.?

மிகவும் 'டிரெண்டான' மற்றும் மிகவும் சிறிய கருவியான ஹெட்போன்கள் உங்கள் காதுகளுக்கு இசையை மட்டுமே வழங்குகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமைக்கு அடையாளம். எப்போதும் கைகளில் மொபைல்போன், காதுகளில் ஹெட்செட் என திரியும் நம்மில் பலருக்கு மொபைல்போன்களும், ஹெட்போன்களும் உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது என்றே சொல்லலாம்.

பிறரை தொந்தரவு செய்யாத ஹெட்செட்கள்

பிறரை தொந்தரவு செய்யாத ஹெட்செட்கள்

பிறரை தொந்தரவு செய்யாமல் இசை கேட்க வேண்டும் என்ற தேவைக்காக நம் காதுகளுக்குள் புகத்தொடங்கிய ஹெட்செட்கள் தற்போது சாலையோரம்- பேருந்து - ரயில் - ஸ்கூட்டார் பயணம் தொடங்கி உறங்கும் போது கூட நம் காதுகளுக்குள்ளேயே திணிக்கப்பட்டு கிடக்கின்றன என்பது தான் நிதர்சனம். இவ்வாறான அதிகப்படியான ஹெட்போன் பயன்பாடு நம் காதுகளுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் எளிய வழிமுறைகளை காண்போம்.

பக்க விளைவு #1

பக்க விளைவு #1

ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பக்க விளைவு #2

பக்க விளைவு #2

உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பக்க விளைவு #3

பக்க விளைவு #3

மிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது. அது காதிரைச்சல், காது தொற்று மற்றும் காது கேளாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

பக்க விளைவு #4

பக்க விளைவு #4

பெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும், அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறுகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

பக்க விளைவு #5

பக்க விளைவு #5

விசித்திரமான மற்றும் அதிகப்படியான சத்தமானது காதுகளில் ஒரு குறிப்பிட்ட கூர்மையான வலியை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பக்க விளைவு #6

பக்க விளைவு #6

உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பக்க விளைவு #7

பக்க விளைவு #7

ஹெட்போன்களால் ஏற்படும் விபத்துகள். இந்த விளைவு பற்றிய விளக்கமே தேவையில்லை பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்பட பிரதான காரணமாய் இருப்பது ஹெட்போன்கள் தான்..!

தப்பிக்கும் வழிமுறை #3

தப்பிக்கும் வழிமுறை #3

முடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பான்ஜ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பான்ஜ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுங்கள்.

தப்பிக்கும் வழிமுறை #4

தப்பிக்கும் வழிமுறை #4

நடக்கும் போது, பிற வாகன பயணத்தின் போதும் ஹெட்செட்களை தவிர்த்திடுங்கள், இல்லையெனில் குறைந்த அளவிலான ஒலியை கையாளுங்கள்.

Best Mobiles in India

English summary
Malaysian boy electrocuted wearing headphones phone plugged charger : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X