தமிழக மக்களுக்காக 12 இலக்க எண்ணுடன் உருவாக்கப்படும் மக்கள் ஐடி.! விரிவான தகவல்.!

|

இந்தியாவில் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது ஆதார். அதாவது கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்து இடங்களிலும் தேவைப்படும் ஒரு மிக முக்கியமான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆதார்.

ஆதார்..

ஆதார்..

அதேபோல் அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகள் போன்ற அனைத்தையும் பெற இந்த ஆதார் அட்டை அதிகமாக உதவுகிறது என்றே கூறலாம். குறிப்பாக கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆதார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா? ஆதாரம் இதோ! ரகசியத்தை உடைத்த NASA விஞ்ஞானி..செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா? ஆதாரம் இதோ! ரகசியத்தை உடைத்த NASA விஞ்ஞானி..

தமிழக அரசு

தமிழக அரசு

இந்நிலையில் ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சமூக நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 10 முதல் 12 இலக்கங்களைக் கொண்ட ஐடி எண்ணை உருவாக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சபாஷ் சரியான அறிவிப்பு: இனி USB Type-C போர்ட் மட்டும் தான்! இந்தியாவில் எப்போது அமலுக்கு வருகிறது?சபாஷ் சரியான அறிவிப்பு: இனி USB Type-C போர்ட் மட்டும் தான்! இந்தியாவில் எப்போது அமலுக்கு வருகிறது?

அனைத்து தரவு

அதாவது தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த திட்டம் சார்ந்த அனைத்து தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது.

Zomato நாயகனே.. 2022 இல் 3330 முறை உணவு ஆர்டர் செய்த ஒரே நபர்! கம்பெனி கொடுத்த அதிசிய பொருள்.!Zomato நாயகனே.. 2022 இல் 3330 முறை உணவு ஆர்டர் செய்த ஒரே நபர்! கம்பெனி கொடுத்த அதிசிய பொருள்.!

பொது மக்களுக்கான நலத்திட்டங்கள்

பொது மக்களுக்கான நலத்திட்டங்கள்

குறிப்பாக பொது விநியோக துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பொது மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் பல துறைகள் தனித் தனியாக தரவுகளைச் சேமித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய சைஸ் TV-கள் மீது வாய்பிளக்க வைக்கும் ஆபர்களை அறிவித்துள்ள Samsung! கூடவே FREE சவுண்ட் பார் வேற!பெரிய சைஸ் TV-கள் மீது வாய்பிளக்க வைக்கும் ஆபர்களை அறிவித்துள்ள Samsung! கூடவே FREE சவுண்ட் பார் வேற!

தரவு தளத்தை தரவு தயார் செய்ய முடிவு செய்துள்ளது தமிழக அரசு

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளை கொண்டு ஒருங்கிணைப்பு மாநில குடும்பத் தரவு தளத்தை தரவு தயார் செய்ய முடிவு செய்துள்ளது தமிழக அரசு. மேலும் இது தொடர்பான பணியைத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளது.

இப்படியாச்சும் ஒரு ஆபர் கொடுத்தீங்களே சந்தோஷம்.! வோடபோன் ஐடியா பயனர்கள் கவனத்திற்கு.!இப்படியாச்சும் ஒரு ஆபர் கொடுத்தீங்களே சந்தோஷம்.! வோடபோன் ஐடியா பயனர்கள் கவனத்திற்கு.!

முதல்வர் காப்பீட்டு திட்டம்

முதல்வர் காப்பீட்டு திட்டம்

குறிப்பாக முதல்வர் காப்பீட்டு திட்டம், வருவாய், கல்வி, பொது விநியோகம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம், சுகாதாரம் எனப் பல்வேறு துறைகளிடம் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்த தரவுத் தளம் தான் உருவாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் ஆதார் எண் போன்று ஒவ்வொரு குடிமக்களுக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 10 அல்லது 12 இலக்க எண் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் ஐடி வழங்கப்படும்

அதேபோல் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இந்த தனித்துவமான மக்கள் ஐடி வழங்கப்படும். பின்பு இது 10 முதல் 12 இலக்க கொண்டதாக இருக்கும். மேலும் இதன் மூலம் அனைத்து சேவைகளையும் இந்த ஒரு எண் மூலம் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

IRCTC-ல அக்கௌன்ட் இருக்கா.. அப்போ மாட்டிக்கிட்டீங்க.! மொத்தமா கோவிந்தா போட்ட ஹேக்கர்.!IRCTC-ல அக்கௌன்ட் இருக்கா.. அப்போ மாட்டிக்கிட்டீங்க.! மொத்தமா கோவிந்தா போட்ட ஹேக்கர்.!

 பணிகள் தொடங்கும்

பணிகள் தொடங்கும்

தற்போது இந்த தரவுத் தளம் தயார் செய்வதற்கான டெண்டரை மின் ஆளுமை முகமை கோரியுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடமாநிலத்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்களுக்கென தனித்துவமான கார்டு வழங்கப்படுவது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Makkal ID will be created with 12 digit number for people of Tamil Nadu! Detailed information: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X