Home
News

காதலர் தின பரிசாக பிளாக்பெர்ரியின் புதிய அப்ளிக்கேஷன்கள்!

By Super
காதலர் தின பரிசாக பிளாக்பெர்ரியின் புதிய அப்ளிக்கேஷன்கள்!

இன்றைய தலைமுறையில் காதலர் தினம் உலகெல்லாம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்திற்கு காதலர்கள் பரிசோடு காத்திருப்பது போல் இப்பொழுது பல தொழில் நுட்ப நிறுவனங்களும் ஸ்பெஷல் வசதிகளுடன் காத்திருக்கின்றனர். மொபைல் மார்கெட்டில் புகழ் பெற்ற பிளாக்பெர்ரி நிறுவனமும் அப்படி ஒரு ஸ்பெஷல் செய்தியுடன் காத்திருக்கிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு பிளாக்பெர்ரி நிறுவனம் சில புதிய அப்ளிகேஷன் வசதிகளை வழங்க உள்ளது. அப்படி வெளியிடும் அப்ளிக்கேஷன்களின் பெயர்களும், அதன் விலையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் லவ் ஸ்டிங்ஸ் என்ற ஆப்ஸ் ரூ.270 விலையில் பெறலாம். ஆனால் இது காதலையும், காதலர் தின கொண்டாட்டத்தையும் விரும்பாத தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

லவ் என்ற அப்ளிகேஷனும் உள்ளது. இந்த அப்ளிக்கேஷனை ரூ.60 விலையில் டவுன்லோட் செய்யலாம். அளவில்லாத காதலை பார்த்திருப்போம் ஆனால் அதற்கு ஓர் கேல்குலேட்டரையும் வழங்குகிறது பிளாக்பெர்ரி நிறுவனம். லவ் கேல்குலேட்டர் என்ற அப்ளிக்கேஷனை ரூ.45 விலையில் பெறலாம்.

வெர்ஜின் ப்ளூ டிராவல் என்ற அப்ளிக்கேஷனை ஃபிரீயாகவே டவுன்லோட் செய்யலாம். வருகிற காதலர் தினத்திற்கு மனம் விரும்பியவர்களோடு வெளியில் செல்ல இருக்கிறீர்களா? அதற்கு உபயோகம் அளிக்கும் வகையில் ஒரு சிறந்த அப்ளிக்கேஷனை பிளாக்பெர்ரி வழங்கி உள்ளது. இதன் மூலம் மூவி டிக்கெட் எளிதாக புக் செய்யலாம். ரொமேன்டிக் டின்னருக்கு சிறந்த ரெஸ்டாரன்டை தேர்வு செய்யவும் இந்த பாய்ன்ட் அப்ளிகேஷன் உதவும்.

இப்படி காதலர்களை குஷிப்படுத்த பிளாக்பெர்ரி அற்புதமான அப்ளிகேஷன் வசதிகளை வழங்க உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X