Home
News

உஷார் : பெண்களை 'குறி' வைக்கும் ஆன்லைன் ஆசாமிகள்..!

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பெண்கள் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது என்பது தான் நிதர்சனம். கேலி, கிண்டல், சைகை என 'ஈவ் டீசிங்'கில் ஆரம்பித்த அந்த கேள்விக்குறி, இப்போது அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தின் இன்டர்நெட் வரை நீண்டு கொண்டே தான் போகிறது..!

எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!

அதுவும், நாம் நினைப்பதை விட அதிகமான பாதிப்புகளை, பெண்கள் திந்தினம் சந்திக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான உண்மை. அதற்கு பலமான ஒரு ஆதாரமாய் நிற்கிறது சமீபத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்று..!

சைபர் குற்றம் :

சைபர் குற்றம் :

ஐ.நா-வின் புதிய அறிக்கை ஒன்று உலகம் முழுக்க, ஆன்லைன்னில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர் என்று தெரிவிக்கிறது.

சட்டரீதி :

சட்டரீதி :

மேலும் அந்த குற்றங்களில், மொத்தம் 86 நாடுகளையும் சேர்த்து வெறும் 26% குற்றங்கள் மட்டுமே சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் பெற்றுள்ளனவாம்.

ஆன்லைன் வன்முறை :

ஆன்லைன் வன்முறை :

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் ஆன்லைன் வன்முறை, உலகம் விழித்துக்கொள்ள ஒரு குரல் (Combating Online Violence Against Women & Girls: A Worldwide Wake-Up Call) என்ற ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது ஐ.நா..!

ஆய்வு :

ஆய்வு :

இந்த ஆய்வை நடத்தியது ஐ.நா-வின் அலைக்கற்றை ஆணைக்குழு (United Nations Broadband Commission) என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு :

பாதிப்பு :

மேலும் இந்த ஆய்வின்படி பெண்களுக்கு எதிரான ஆன்லைன் குற்றங்களில் குறைந்த அளவிலான பாதிப்புகளை பெறும் நாடுகளில் இந்தியாவும் அடங்குகிறது.

புகார் :

புகார் :

அப்படியாக இந்தியாவை பொருத்தமட்டில், 35% பெண்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக புகார் அளிக்கும் அதே நேரத்தில் 46.7% பெண்கள் புகார்கள் எதுவும் அளிப்பது இல்லை என்கிறது ஐ.நா அறிக்கை.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

மேலும் 18.3% இந்திய பெண்கள் தாங்கள் பாதிக்கபடுவதைக்கூட உணராமல் இருக்கின்றார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் ஐ.நா அறிக்கை அம்பலபடுத்தியுள்ளது.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

உறுதி அளிக்கும் வகையில், இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 6 நாடுகளை சேர்ந்த 67% பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளார்களாம்.

பட்டியல் :

பட்டியல் :

இந்தியாவையும் சேர்த்து பாதுகாப்பாக உணரும் பெண்கள் கொண்ட நாடுகளின் பட்டியல் : பாகிஸ்தான், பெரு, நைஜீரியா, இந்தோநேஷியா மற்றும் கென்யா.

 திருத்தம் :

திருத்தம் :

மேலும் ஐ.நா-வின் அறிக்கையில் டேட்டா ப்ரைவசி, மனத்தை புண்படுத்துகிற இன்டர்நெட் மற்றும் டிஜிட்டல் தொடர்பு உரையாடல்கள் போன்ற இந்திய சட்டங்களில் திருத்தம் தேவை என்றும் அறிவித்துள்ளது.

பாலியல் தொந்தரவு :

பாலியல் தொந்தரவு :

உலகம் முழுக்க 18 முதல் 24 வயதிற்குள் உள்ள பெண்கள் தான், பின்தொடர்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எதிரான செயல் :

எதிரான செயல் :

ஆன்லைன் குற்றங்கள், இன்டர்நெட் சுதந்திரத்தை திசை திருப்பும் வகையில் அமைவதாகவும், பல இடங்களில் அது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான செயல்களில் ஈடுபடுவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

தருணம் :

தருணம் :

ஆக பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்களுக்கு எதிராக உலக நாடுகள் விழித்து கொண்டு, இதை தடுக்க செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.

அறிவுரை :

அறிவுரை :

மேலும் இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளுக்கு பல அறிவுரைகளை ஐ.நா வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ஆன்லைனில், பெரும்பாலான பெண்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள் (Abuse) என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா. மேலும் பல தகவல்களுக்கு - தமிழ் கிஸ்பாட்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X