Home
News

Chrome யூஸ் பண்ணுவீங்களா.. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நம்பர் பிளேட்.. இனிமே தானாகவே ஃபில்-ஆக போகுது!

கூகிள் (Google) நிறுவனத்தின் குரோம் பிரவுசர் (Chrome Browser) வைத்திருக்கும் ஒட்டுமொத்த யூசர்களும் இனிமேல் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் நம்பர் பிளேட் விவரங்களை டைப் செய்வதற்கு முன்பு, இதை மட்டும் செய்து முடித்துவிடுங்கள். ஏனென்றால், தானாகவே விவரங்களை பூர்த்தி செய்யும் ஆட்டோஃபில் (Autofill) பீச்சர் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குரோம் ஆட்டோஃபில் அப்கிரேட் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

குரோம் என்ஹான்ஸ்டு ஆட்டோஃபில் (Chrome Enhanced Autofill)
குரோம் பிரவுசரில் ஏற்கனவே யூசர் நேம் (User Name), பாஸ்வேர்ட் (Password) மட்டுமல்லாமல், முகவரி (Address), டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பேமெண்ட் (Payment) விவரங்களை ஆட்டோஃபில் செய்து கொள்ளலாம். இப்போது, என்ஹான்ஸ்டு ஆட்டோஃபில் அப்கிரேட் மூலம் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் நம்பர் பிளேட் விவரங்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Chrome யூஸ் பண்ணுவீங்களா.. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நம்பர் பிளேட்!

* அடையாள ஆவணங்கள் (Identity Documents)
* வாகன விவரங்கள் (Vehicle Information)
* செக்யூரிட்டி & யூசர் கன்ட்ரோல் (Security & User Control)

அடையாள ஆவணங்கள்:
பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய அடையாள ஆவணங்களானது பல்வேறு சேவைகளுக்கு தேவைப்படுகிறது. ஆகவே, ஆன்லைனில் அதன் விவரங்களை அடிக்கடி பகிர வேண்டி இருக்கிறது. இதை ஒவ்வொரு முறையும் டைப் செய்வது கூடுதல் வேலை போல இருக்கலாம். ஆனால், இனிமேல் ஒரு முறை பூர்த்தி செய்துவிட்டால் போதும், அதை ஆட்டோஃபில் செய்து கொள்ளலாம்.

வாகன விவரங்கள்:
ஓட்டுநர் உரிமம் மட்டுமல்லாமல், உங்களது வாகனத்தின் நம்பர் பிளேட் விவரங்கள், உரிமையாளர் விவரங்கள், இன்ஜின் மற்றும் சேசிஸ் நம்பர் போன்ற விவரங்கள் ஆகியவை இன்சூரன்ஸ் ரினிவல் உள்ளிட்ட முக்கிய சேவைக்கு தேவைப்படும். இதையும் இந்த என்ஹான்ஸ்டு ஆட்டோஃபில் அப்கிரேட் மூலம் ஒரு முறை பூர்த்தி செய்து அடுத்த முறை ஆட்டோஃபில் செய்து கொள்ளலாம்.

Chrome யூஸ் பண்ணுவீங்களா.. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நம்பர் பிளேட்!

செக்யூரிட்டி & யூசர் கன்ட்ரோல்:
இதுபோன்ற முக்கிய ஆவணங்களின் விவரங்கள் குரோமில் ஸ்டோர் செய்யப்படுவதால், அதன் மீதான செக்யூரிட்டிக்கு கூகுள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த விவரங்களை முழுக்க முழுக்க குரோம் யூசர்களின் ஒப்புதல் மூலம் மட்டுமே ஸ்டோர் செய்யப்படும். அதேபோல, ஒவ்வொரு முறையும் யூசரின் ஒப்புதலை பெற்ற பிறகே ஆட்டோஃபில் செய்யப்படும்.

* என்கிரிப்டட் ஸ்டோரேஜ் (Encrypted Storage)
* யூசர் சம்மதம் (User Consent)
* ப்ராம்ப்ட் உறுதிபடுத்தல் (Prompt Confirmation)

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன விவரங்கள் அனைத்தும் என்க்ரிப்ட் (Encrypted) செய்யப்பட்டு இருக்கும். அதேபோல முதல் முறை கொடுக்கும்போதே, அதை ஸ்டோர் செய்து கொள்ள உங்களது ஒப்புதல் குரோம் மூலம் கேட்கப்படும். இதை நீங்கள் கொடுத்தால் மட்டுமே, அந்த விவரங்கள் அடுத்த முறை ஃபில் செய்வதற்காக ஸ்டோர் செய்து வைக்கப்படும்.

Chrome யூஸ் பண்ணுவீங்களா.. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நம்பர் பிளேட்!

நீங்கள் ஒப்புதலை நிராகரித்து கொள்ளாலம். அதேபோல குறிப்பிட்ட வெப்சைட்டில் இந்த விவரங்களை ஆட்டோஃபில் செய்யும்போது, அதை தவிர்க்கவும் முடியும். ஏனென்றால், ஆட்டோஃபில் செய்யும் முன்பும், குரோம் பிரவுசரானது, உங்களிடம் ஒப்புதல் கேட்கும். அதை கொடுத்தால் மட்டுமே ஆட்டோஃபில் செய்யப்படும். இல்லையென்றால், யூசர்களே பூர்த்தி செய்யலாம்.

ஆகவே, விவரங்களை ஸ்டோர் செய்யும் முன்பும், ஆட்டோஃபில் செய்யும் முன்பும் யூசர்களின் ஒப்புதலுக்கு பிறகே அதை ப்ராம்ட் செய்ய முடிகிறது. இது ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், பிராந்திர மொழிகளிலும் கிடைக்கிறது. ஆகவே, தமிழிலும் விவரங்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். அதேபோல ஆட்டோஃபில்லையும் அதே மொழியில் செய்து கொள்ளலாம்.

எனபிள் என்ஹான்ஸ்டு ஆட்டோஃபில்:
குரோம் பிரவுசரை ஓப்பன் செய்துவிட்டு, வலது புறத்தின் மேலே இருக்கும் மூன்று புள்ளி மெனுவை (Three-Dot Menu) கிளிக் செய்து கொள்ளுங்கள். பிறகு, செட்டிங்ஸ் சென்று, ஆட்டோஃபில் & பாஸ்வேர்ட் பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது, என்ஹான்ஸ்டு ஆட்டோஃபில் ஆப்ஷன் தோன்றும். அதை கிளிக் செய்து எனபிள் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Major Chrome Update Autofill Expanded To Include Passports Driver Licenses Vehicle Information
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X