2025ம் ஆண்டு முதல் PF கணக்கில் வரும் முக்கிய மாற்றங்கள்.. இதோ முழு விவரம்..
2024ம் ஆண்டு விடைபெற்று இன்று இரவு 12 மணி முதல் 2025ம் ஆண்டு பிறக்க உள்ளது. குறிப்பாக இந்த 2025-ம் ஆண்டு இபிஎஃப்ஒ (EPFO) திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய மாற்றங்கள் பி.எஃப் (PF) உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டத்தில் UAN ஆக்டிவேஷன் செய்ய மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைக்கவும் ஜனவரி 15ம் தேதி வரை தான் அவகாசம் உள்ளது. அதுவும் UAN ஆக்டிவேட் செய்தால் மட்டுமே EPFO சேவைகளைப் பயன்படுத்த முடியும். ஏற்கெனவே காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அரசு அவகாசம் தர வாய்ப்பில்லை. ஆகவே ஜனவரி 15ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பி.எஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து விரைவாகப் பணம் எடுத்துக்கொள்ளும் வகையில் ஏடிஎம் கார்டை வழங்க EPFO அமைப்பு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஏடிஎம்மில் இருந்து நேரடியாகப் பணம் எடுக்கும் வசதி 2025-26 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகி. குறிப்பாக இந்த வசதி அனைத்து பி.எஃப் பயனர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
இப்போது பி.எப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் சார்பில் 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது.ஆனால் இந்த வரம்பை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதாவது அடுத்து ஆண்டு வரும் புதிய விதிகளில் ஊழியர்கள் 12%க்கும் அதிகமான தொகையை PF-க்கு அளிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO அதன் ஐடி (IT) உள்கட்டமைப்பை மேம்படுத்தப் போகிறது. அதாவது EPFO ஐடி சிஸ்டம் அப்கிரேடு (EPFO IT system upgrade) செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பி.எஃப் தொகையை க்ளெய்ம் செய்யும் பயனாளிகளுக்கு தங்கள் வைப்புத்தொகையைக் குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல் ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக EPFO IT சிஸ்டம் அப்கிரேடு செய்வதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், பி.எஃப் பயனர்களின் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மோசடி வழக்குகள் குறையும் என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது. அதாவது புதிய விதியின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத் தொகையை நாட்டில் எந்த வங்கியிலிருந்தும், எந்த வங்கிக் கிளையிலிருந்து எடுக்க முடியும். இதற்காக அவர்களுக்குக் கூடுதல் சரிபார்ப்பு தேவை இருக்காது. குறிப்பாக எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம் என்பதால் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகள் மற்றும் புதிய திட்டங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளன. இந்த அமைப்பு கொண்டுவரும் புதிய சேவைகள் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications







