சரியான நேரத்தில் உதவி செய்யும் முகேஷ் அம்பானி.! பாராட்டை பெற்றுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.!

|

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று தான் கூறவேண்டும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவின் முதல் அ

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது

அதேபோல் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அந்த மாநிலத்தில் வர்தகம் முடங்கிய நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொத்து கொத்தாக பறிபோகும் பணம் : கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்துளீர்களா? அப்போ இதை படிங்க..கொத்து கொத்தாக பறிபோகும் பணம் : கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்துளீர்களா? அப்போ இதை படிங்க..

ஆக்சிஜன் சிலிண்டர்

ஆக்சிஜன் சிலிண்டர்

தொடர்ந்து இந்த கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. அதாவது நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தேவையாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்.. என்ன சொல்கிறது லீக் தகவல்?ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்.. என்ன சொல்கிறது லீக் தகவல்?

முகேஷ் அம்பானியின் நிறுவனம்

முகேஷ் அம்பானியின் நிறுவனம்

இந்த நிலைமையை சமாளிக்க முகேஷ் அம்பானியின் நிறுவனம் உதவியுள்ளது. அதாவது முகேஷ் அம்பானி அவர்களின் குஜராத் ஜாம்நகரில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிர

மேலும் இதை உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிர மாநிலத்தின் நகர வளர்ச்சி துறை அமைச்சரான ஏக்நாத் ஷின்டே தனது டிவிட்டரில் குஜராத் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொழிலற்சாலையில் இருந்து சுமார் 100 டன் ஆக்சிஜன்-ஐ இலவசமாக அளிக்க உள்ளதாக தெரிவித்தது என்று தகவல் கூறியுள்ளார்.

இவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியாஇவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியா

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா

அதேபோல் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு பல கட்டுபாடுகளை விதித்திருந்தாலும் பாதிப்புகளிகள் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இன்னும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது இரவு நேர ஊரடங்கை அமல் படுத்துவது, வார இறுதி நாள்களில் ஊரடங்கை கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Maharashtra will get 100 tonnes of oxygen from Reliance: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X