டிக்டாக் இளைஞர்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் புதிய படைப்பை உருவாக்கிய இளைஞர்!

|

இன்றைய காலகட்டத்தில் டிக்டாக் போன்ற தளங்களில் இளைஞர்கள், அவர்களின் அடையலாம் காட்டிக்கொண்டு தங்களின் திறமைகளுக்கு ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக்கொள்கின்றனர். ஆனால் இன்னும் சில இளைஞர்கள் அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என புதிய படைப்புக்களைக் கண்டுபிடித்து அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

மதுரையைச் சேர்ந்த பாசில்

மதுரையைச் சேர்ந்த பாசில்

அப்படி காத்திருக்கும் இளைய படைப்பாளிகளில் ஒருவர் தான் மதுரையைச் சேர்ந்த பாசில் (23). சாலையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் தடுக்கும் நவீன கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இதற்கு முன்பு குடி போதையில் வாகனம் ஓட்டிவருபவர் குடித்துள்ளாரா என்பதைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் இந்திய ஆக்சிடென்ட் பிரவென்டிங் கிட்

டிஜிட்டல் இந்திய ஆக்சிடென்ட் பிரவென்டிங் கிட்

கவனக்குறைவாலும், அதிவேகத்தினாலும் தான் ஏராளமான விபத்துகள் நடக்கிறது என்கிறார் பாசில். இதனைத் தடுப்பதற்காக 'டிஜிட்டல் இந்திய ஆக்சிடென்ட் பிரவென்டிங் கிட்' என்ற பெயரில் இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாதனத்தை வெறும் ரூ.5000 செலவில் இவர் உருவாக்கியுள்ளார்.

'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!

ஸ்டன் பிரேக் போடப்படும்

ஸ்டன் பிரேக் போடப்படும்

இந்த ஆக்சிடென்ட் பிரவென்டிங் கிட்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம், சுமார் 4 மீட்டர் அளவிற்கு முன்னாள் வாகனமோ அல்லது ஆட்களோ கடந்தால், உடனே தானாக காரின் 'ஸ்டன் பிரேக்' செயல்படும்படி வடிவமைத்துள்ளார். இதனால் அதிக வேகத்தினாலும், கவனக்குறைவினாலும் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்கிறார் பாசில்.

ஷீபா வாய்ஸ் கன்ட்ரோல் கிட்

ஷீபா வாய்ஸ் கன்ட்ரோல் கிட்

அதேபோல், 'ஷீபா வாய்ஸ் கன்ட்ரோல் கிட்' என்ற பெயரில் புதிய வாய்ஸ் கம்மாண்ட கருவியையும் உருவாக்கியுள்ளார். ஆட்டோமேட்டிக் வாகனங்களில் கார் கதவுகள் சாவி இல்லாமல் லாக் செய்யப்பட்டால் கதவைத் திறப்பதற்குச் சிரமம் என்பதனால், இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.

கூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை! இனி பின் நம்பர் தேவையில்லை!கூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை! இனி பின் நம்பர் தேவையில்லை!

உதவி மற்றும் அங்கீகாரம் தேவை

உதவி மற்றும் அங்கீகாரம் தேவை

வாயிஸ் கமாண்ட் மூலம் சுமார் 15 விதமான சேவைகளை இவரின் ஷீபா வாய்ஸ் கன்ட்ரோல் கிட் செய்யுமென்று தெரிவித்திருக்கிறர். அதேபோல் தற்பொழுது ஆக்சிடென்ட் பிரவென்டிங் கிட் 30 - 35 கி.மீ., வேகத்தில் மட்டுமே செயல்படுகிறது. அரசின் உதவி மற்றும் அங்கீகாரம் கிடைத்தால் 100 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கலாம் என்று தெரிவித்திருக்கிறர்.

source:dinamalar.com

Best Mobiles in India

English summary
Madurai Youngster Created A New Digital India Accident Prevention Device Kit : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X