மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு: தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிள்.!
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் புதிய தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கும் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில் தானாகவே சார்ஜ் ஆகும் வகையில் அருமையான பேட்டரி சைக்கிளை கண்டுப்பிடித்துள்ள மதுரையை சேர்ந்த மாணவர் தனுஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன..

மதுரை மாவட்டம் மேலூர் கோட்ட நந்தம்பட்டியை சேர்ந்தவர் தான் தனுஷ்குமார். இவருடை தந்தை கட்டிட காண்டிராக்டர் என்றுகூறப்படுகிறது. தனுஷ் மதுரையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார்.

அதேபோல் புதிய கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர் தான் தனுஷ். இவர் கடந்த ஆண்டு சோலார் சக்தியின் மூலம்இயங்கும் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து பாரட்டுக்களை பெற்றிருந்தார்.

தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியாக ரீ-சார்ஜபில் இ-பைக் என்ற புதிய சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார் தனுஷ். அதாவது கார்களுக்கு பயன்படுத்தும் 24V ஆல்டர்னேட்டர், பேட்டரி மற்றும் சிறிய மோட்டோர் கொண்டு இந்த புதிய வகை சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

அதேபோல் சைக்கிள் ஓட்டும்போது சைக்கிள் பெடல் பகுதியில் இருந்து செல்லும் செயின் பின் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுஇருக்கும். ஆனால் இந்த புதிய வகை இ-பைக்கில் ஆல்டர்னேட்டருடன் பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த சைக்கிளில் ஒருவர் செல்லும் போது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி தானவே சாரஜ் செய்யப்படுகிறது
என்று கூறியுள்ளார் தனுஷ். பின்பு இதன் மூலம் 40 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்றும், 20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்றார் தனுஷ்குமார்.

இந்த புதிய வகை சைக்கிளைத் தயாரிக்க 35 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது என்று கூறியுள்ளார் தனுஷ்குமார். இதுபோன்றபுதிய தொழில்நுட்பங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பயிற்சியும், முயற்சியும் மட்டுமே ஒருவரை வெற்றிபெற வைக்கும். சிலர் டிவி, செல்போன்களில் தான் மூழ்கியிருக்கிறார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும்தான் பாதிக்கப்படுகிறது. எனவே உங்களுடைய நேரத்தில் வீணடிக்கும் அந்த செயல்களைத் தவிர்த்து உங்களுடைய பொன்னான நேரத்தை அனைத்து விதத்திலும் பயன்தரும் வாசிப்புக்கு, புதிய முயற்சிகளுக்கும பயன்படுத்துங்கள். அதேபோல் ஒருவர் அறிவுரீதியாக தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனில் தொடர்ந்து படிக்க வேண்டும், இதுதான் வெற்றி பெற உதவும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
News Source: puthiyathalaimurai.com


Click it and Unblock the Notifications