ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா?

|

சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றி மற்றும் பரவவிட்ட மதுரையைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு

என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு

என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு இந்திய தேசிய குற்றப் பதிவு பணியகத்துக்கு அறிக்கை ஒன்று அனுப்பியது. 1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் நிறுவப்பட்ட அமைப்பு தான் என்.சி.எம்.இ.சி.

லாப நோக்கற்ற அமைப்பு

லாப நோக்கற்ற அமைப்பு

இந்த அமைப்பானது குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பாகும்.

குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை

குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை

இந்த அமைப்பு குறித்து இந்திய உள்துறை அமைச்சக வட்டாரம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அது, வருடந்தோறும் இந்தியாவில் குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த அமைப்பிடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.

Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!

25,000 குழந்தைகள் ஆபாசப்படம்

25,000 குழந்தைகள் ஆபாசப்படம்

இந்த நிலையில் என்.சி.எம்.இ.சி அமைப்பு ஜனவரி 23 ஆம் தேதி வரையிலான இந்திய குழந்தைகள் பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜனவரி 23 ஆம் தேதிவரை, கடந்த ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் தான் அதிகம்

டெல்லியில் தான் அதிகம்

இதிலும் இந்த பதிவேற்றமானது டெல்லியில் தான் அதிகம் நடந்துள்ளதாக என்.சி.எம்.இ.சி அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அது அரங்கேறியுள்ளது.

பதிவேற்றம் குறித்து விசாரணை

பதிவேற்றம் குறித்து விசாரணை

இந்த புகார் குறித்து மகாராஷ்டிரா மூத்த ஐபிஎஸ் அதிகாரி தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், பதிவேற்றம் செய்யப்பட்ட இடம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாகவே 7 எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

operation Black face

operation Black face

அதேபோல் மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே போன்ற பகுதிகளில் தான் இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் operation Black face என்ற தலைப்பில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மட்டுமின்றி டெல்லி, குஜராத், கேரளா போன்ற பகுதிகளில் சைபர் கிரைம் பிரிவி போலீஸார்கள் சிலரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரித்து வருவதாக அறிக்கை

தமிழகத்தில் அதிகரித்து வருவதாக அறிக்கை

இந்த நிலையில் இந்திய அளவில் சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது தமிழகத்தில் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து சென்னை, திருச்சி, கோவை என தொடர்ச்சியாக பல இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மதுரையில் இருந்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவதாக புகார்

மதுரையில் இருந்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவதாக புகார்

இந்த நிலையில் மதுரை பகுதியில் சிலர் குழந்தைகளின் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக மதுரை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மதுரை போலீசில் புகார் செய்தனர்.

மதுரையை சேர்ந்தவர் கைது

மதுரையை சேர்ந்தவர் கைது

இதையடுத்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரப்பாளையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆரப்பாளையத்தை சேர்ந்த குமார் (40) என்பவர் செல்போன் வழியாக ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் பரப்புவது தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறுது

இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறுது

இதில் குமார் என்ற இளைஞர் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலை செய்து வருவதும், இவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது. குமாரை கைது செய்த மதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?

2 நாளில் மூன்று பேர் கைது

2 நாளில் மூன்று பேர் கைது

அதேபோல் சிறார் ஆபாச படங்களை பரப்பியதாக செந்தில்குமார் என்ற 31 வயது இளைஞரையும் ஆபாச வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக சுந்தரபாண்டியன் என்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 2 நாட்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Madurai persons arrested for sharing and uploading child sexual abuse videos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X