மதுரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்: தமிழன்டா.! கெத்தாக உருவாக்கப்பட்ட முதல் ஜல்லிக்கட்டு அரங்கம்.. வைரல் வீடியோ..
புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை ஜல்லிக்கட்டு மைதானத்தை (Madurai Jallikattu Stadium) தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஜனவரி 23ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்கு முன்பாக, இந்த ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை முழுமையாக காண்பிக்கும் டிரோன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மிகவும் தீவிரமான வேகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தின் திறப்பு விழா (Madurai Jallikattu Stadium Inauguration Date) குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த சமீபத்திய தகவலின் படி, மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் வரும் ஜனவரி 23ம் தேதி அன்று தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏறுதழுவும் மைதானம் (Eruthazhuvuthal stadium), மாண்பிமிகு முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் (Jallikattu arena) நுழைவாயிலில் கலைஞர் 100 என்ற அடையாள வார்த்தைகளுடன், "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்ற பெயருடன் பெயர் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் (Madurai Jallikattu Stadium):
இதை ஆங்கிலத்தில் "Kalaingnar Century Aeruthazhuvuthal Arena" என்ற பெயருடன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5,000-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் விஐபி இருக்கைகள் (VIP seating), அருங்காட்சியகம் (Museum), காளை கொட்டகை, கால்நடை மருந்தகம் (Veterinary hospital) மற்றும் சுகாதார ஆதரவு மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியின் போது நடைபெறும் அசம்பாவிதங்களை உடனுக்குடன் கையாள, இங்கு விரைவான முதலுதவி மற்றும் தொடர்ச்சியான மருத்துவ உதவி வழங்க பிரத்தியேக மருத்துவமனை (hospital) வசதியும் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்று தளங்களைக் கொண்ட இந்த அரங்கில் காளைகளை அடக்குபவர்கள் மற்றும் காளை உரிமையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 27,534 சதுர அடி பரப்பளவில் உள்ள தரை தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், காளை மற்றும் வீரர்களுக்கான அவசர சிகிச்சை அறை, ஊடக அறை, காளை பதிவு அறை போன்ற அறைகளை கொண்டுள்ளன.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் (Kalaingnar Century Aeruthazhuvuthal Arena):
அதேபோல், இந்த தளத்தின் மற்றொரு பகுதி தமிழர் அருங்காட்சியகம், வீரர்கள் ஆடை மாற்றும் அறை, ஸ்டால்கள், லாக்கர்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் (16,921 சதுர அடி) விஐபி அறை மற்றும் ஓய்வு அறை, சரக்கறை மற்றும் தங்குமிடங்கள் போன்றவை உள்ளன.
இரண்டாவது தளத்தில் (9,020 சதுர அடி) ஸ்டோர் மற்றும் உபகரணங்கள் அறை மற்றும் மூன்றாவது தளம் (1,140 சதுர அடி), தலைமை அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வளாகத்தில் அமைக்கப்பட உள்ள தமிழர் அருங்காட்சியகத்தில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட, 'பல்லாங்குளி,' 'ஆடு புலி ஆட்டம்,' கபடி, போன்ற பல்வேறு விளையாட்டுகள் ஓவியங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படும்.
பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளதால், வரும் ஜனவரி 23ம் தேதி தமிழக முதல்வர் இந்த மதுரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை முழுமையாக காண்பிக்கும் டிரோன் வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறது.


Click it and Unblock the Notifications








