Home
News

தேவையற்ற வீடியோகளை பறப்பும் "டிக் டாக்" செயலிக்கு உடனே தடை.! மதுரை ஹைகோர்ட்.!

டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார் தாக்கல் செய்த மனு நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணைக்கு வந்த மனுவில் மனுதாரர் எஸ்.முத்துக்குமார் டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

50 கோடி பயனர்கள்

50 கோடி பயனர்கள்

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 75 மொழிகளில், பல ன் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திவருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் முதல் சாமானியர் வரை

பள்ளி மாணவர்கள் முதல் சாமானியர் வரை

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தவரான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள்

தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள்

முக்கியமாக டிக்-டாக் செயலியைக் குழந்தைகளும் தற்பொழுது பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்து வருவதாகவும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகக் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. பல விபரீத சம்பவங்கள் நடக்க, இந்த ‘டிக்-டாக்' செயலி காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகளின் கருத்து

நீதிபதிகளின் கருத்து

தமிழகத்தில் பல குற்றங்கள் அதிகரிக்க இந்த மொபைல் செயலிகள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்குப் பாதிக்கும் வகையில் டிக் டாக் செயலி செயல்பட்டு வருகிறது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.

 டிக் டாக் செயலிக்கு தடை

டிக் டாக் செயலிக்கு தடை

இந்தோனேசியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் முன்பே இந்த டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் இந்த டிக் டாக் செயலியைப் பயன்படுத்த மற்றும் பதிவிறக்கம் செய்யத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை மீண்டும் ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Madurai High Court directs Centre to prohibit Tik Tok download : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X