கதிர்வீச்சு மூலம் கிருமிகள் அழிப்பு - எலக்ட்ரிக் சானிடைசரை உருவாக்கிய மதுரை பொறியாளர்!

|

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தோற்று காரணமாக ஸ்தம்பித்துள்ளது. பல நாடுகளில் 40 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நாடுகளில் 90 நாட்கள் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. வீட்டிற்குள் அடைந்திருக்கும் மக்கள் அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா தோற்று ஆபத்து

கொரோனா தோற்று ஆபத்து

வெளியில் சென்று வீடு திரும்புவோருக்கு மனதில் அச்சம் சற்று அதிகமாகவே உள்ளது, இதற்கான காரணம் கொரோனா தோற்று எந்த ரூபத்தில், எப்படி வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்பதால் தான். வெளியிலிருந்து வீட்டிற்குள் வாங்கி வரும் பொருட்களில் தோற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்வது, சானிடைஸ் செய்வது

கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்வது, சானிடைஸ் செய்வது

இதனால், வாங்கி வந்த போர்டுகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்வது, சானிடைஸ் செய்வது போன்ற செயல்களை மக்கள் கையாண்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, ஆங்காங்கே சிலர் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அதை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?

மதுரையைச் சேர்ந்த பொறியாளர் கண்டுபிடிப்பு

மதுரையைச் சேர்ந்த பொறியாளர் கண்டுபிடிப்பு

அந்த வரிசையில் தற்பொழுது, மதுரையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் இ-சானிடைசர் பாக்ஸ் என்ற சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனத்தின் மூலம் சுமார் 20 நிமிடங்களில் கொரோனா வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்கிறார் இதை உருவாக்கிய சுந்தரேஸ்வரன்.

Z-பாக்ஸ்

Z-பாக்ஸ்

அன்றாட தேவைக்காக நாம் வெளியிலிருந்து வாங்கி வரும் பல பொருட்களில் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது. பல கைகள் மாறி, கடைகளிலிருந்து நாம் வாங்கி வரும் பொருட்களில் கொரோனா தொற்றுக்கான வாய்ப்பு அதிகமுள்ளது, இதனால், மிகவும் கவனமாகப் பொருட்களைக் கையாள வேண்டும். நீங்கள் வாங்கி வரும் பொருட்களில் உள்ள வைரஸ் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களை அழிக்க இந்த Z-பாக்ஸ் உதவுகிறது.

Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?

இ-சானிடைசர்கள்

இ-சானிடைசர்கள்

மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரேஸ்வரன் என்பவர் தான் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதற்கு அவர் Z-பாக்ஸ் எலக்ட்ரானிக் சானிடைசர் என்று பெயரிட்டுள்ளார். இவர் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடுகளில் இந்த இ-சானிடைசர்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

பயம் இல்லாமல்பாதுகாப்பாக இருக்கலாம்

பயம் இல்லாமல்பாதுகாப்பாக இருக்கலாம்

இந்த Z-பாக்ஸ் உள்ளே நாம் பயன்படுத்திய மணிபர்ஸ், ரூபாய் நோட்டு, பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை வைத்து 20 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இந்த பெட்டியில் இருக்கும் சி-ரே(C-Ray) கதிர்வீச்சு நோய் கிருமிகளை அழித்துவிடும் என்கிறார் சுந்தரேஸ்வரன். இந்த இசட் பாக்ஸில் இறைச்சி தவிர காய்கறிகள் அலைபேசி கர்சீப் போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து 'சுவிட்ச் ஆன்' செய்து கொரோனா பயம் இல்லாமல் இருக்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Madurai Engineer Invented New E-Sanitizer Box Called Z Box To Kill Micro Organisms : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X