Home
News

ரூ.74 லட்சம் மதிப்பிலான 581 மொபைல்கள் கண்டுபிடிப்பு- ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளிப்பது எப்படி?

மதுரை மாவட்ட காவல்துறை இதுகுறித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மதுரையில் சைபர் கிரைம் காவல் நிலையமானது மார்ச் 2021 முதல் ஆரம்பிக்கப்பட்டது. சைபர்கிரைம் காவல் பிரிவு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டு மொபைல்களில் கடந்த இரண்டு மாதங்களில் சைபர் காவல் நிலையம் மூலம் ரூ.10,45,00 மதிப்பிலான 70 மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் துரித நடவடிக்கை

காவல்துறையின் துரித நடவடிக்கை

அதேபோல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையின் மூலம் ரூ.74,58,853 மதிப்புள்ள 581 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை எடுத்து கடந்த ஐந்து மாதங்களில் ரூ.5,68,500 எனவும் மொத்தம் இதுவரை ரூ.24,14,636 எனவும் உரியவர்களின் வங்கிக்கணக்கில் திரும்ப கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

விழிப்புணர்வோடு இருக்கும்படி எச்சரிக்கை

விழிப்புணர்வோடு இருக்கும்படி எச்சரிக்கை

இதுபோன்று வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், ஓடிபி போன்ற விவரங்களை முன்பின் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் எனவும் பண இரட்டிப்பு அளிக்கும் இன்வெஸ்ட்மென்ட் ஆப்-களை நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பி முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் லோன் ஆப்களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

155260 என்ற இலவச அழைப்பு எண்

155260 என்ற இலவச அழைப்பு எண்

இதுபோன்ற மோசடி செயலுக்கு உள்ளாகும்பட்சத்தில் 155260 என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளும்படியும், அல்லது https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் 24 நேரம் புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எந்தவிதத்திலும் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகாதபடி எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியமாகும். குறிப்பாக முகம் தெரியாத நபர்களிடம் பணம் செலுத்துவது, பாஸ் வேர்ட், ஓடிபி போன்றவற்றை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

தொடர்கதையாகும் பண மோசடி

தொடர்கதையாகும் பண மோசடி

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள். குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

கோடிக்கணக்கான பணம் பரிசு

கோடிக்கணக்கான பணம் பரிசு

அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோன்ற நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

ஏடிஎம் கார்ட் நம்பர், ஓடிபி எண் வங்கி கணக்கு விவரம்

ஏடிஎம் கார்ட் நம்பர், ஓடிபி எண் வங்கி கணக்கு விவரம்

ஏடிஎம் கார்ட் நம்பர், ஓடிபி எண் வங்கி கணக்கு எண், பான் எண் உள்ளிட்டவை கேட்டு இது தொடர்பாக யாரேனும் அழைப்பு விடுத்தால் தயவு செய்து துண்டித்துவிடவும். வங்கி அதிகாரிகள் உட்பட யாரும் இதை அழைப்பில் கேட்கமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் வாட்ஸ்அப் மூலம் வர்த்தகர் என தங்களை அறிமுகம் செய்து உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினால் அதை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எந்த லிங்க்கையும் கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டாம்

எந்த லிங்க்கையும் கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டாம்

தங்களது செல்போனுக்கு வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டாம். இந்த லிங்க்கை கிளிக் செய்வது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தங்களது குடும்பம் சார்ந்த பெண்கள் உட்பட குடும்பத்தார் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி பணம் கேட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவும். அதேபோல் செல்போன் தொலைந்துவிட்டால் உடனே பிளாக் செய்யவும், ஆப் டவுன்லோட் செய்து அதில் உங்கள் கைரேகை பதிவு செய்வதில் கவனம் தேவை, வாட்ஸ்அப் மெசேஜ், பேஸ்புக் மெசேஜ் மூலம் தங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்த நபர் கணக்கு போல் உருவாக்கி அவசரம் என பணம் கேட்பார்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும். ஏடிஎம் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது கவனம் தேவை.

ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்

ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்

பழைய கார், பைக் தள்ளுபடி விலையில் உள்ளது என கூறி முன்பணம் கேட்டால் செலுத்த வேண்டாம். நிலத்தில் மொபைல் டவர் அமைப்பதாக கூறி பணம் கேட்பார்கள், ஏடிஎமில் பணம் எடுக்கும்போது யாரேனும் உடனே நுழைந்து பின் நம்பர் கவனித்தால் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ கால் செய்யும் போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மிரட்டல் விடுக்கலாம். அதேபோல் பயன்படுத்தாத பழைய வங்கி கணக்குகளை முடிக்க வைக்க வேண்டும் போன்ற பல்வேறு வகையில் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Madurai Cyber Crime Police Recovers Rs.10,45,000 Worth 70 Missing Mobiles: Awareness About Online Frauds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X