Home
News

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை.! விசாரணையை துவங்கிய காவல்துறை.!

மதுரை: நாகமலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேங்கட சுப்பிரமணியன் (41) மற்றும் அவரது மனைவி பட்டு மீனாட்சி (33) என்ற இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடி சூதாட்டத்தில் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை.

மதுரை: நாகமலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேங்கட சுப்பிரமணியன் (41) மற்றும் அவரது மனைவி பட்டு மீனாட்சி (33) என்ற இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடி சூதாட்டத்தில் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காவல்துறையினருக்குத் தகவல்

காவல்துறையினருக்குத் தகவல்

நாகமலை என்.ஜி.ஜி.ஓ காலணியில் இவர்கள் வசித்து வந்த வீட்டில் கடந்த சில நாட்களாக ஆள் நடமாட்டம் எதுவுமின்றி காணப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொது, உடல் அழுகிய நிலையில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மாணவி பட்டு மீனாட்சி தூக்கில் தொங்கியபடி சடலமாக காணப்பட்டுள்ளனர். இருவரின் உடலையும் காவல்துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ள தம்பதி

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ள தம்பதி

தம்பதியினரின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணமாக இருக்கும் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. பெரிய அளவில் பணத்தை இழந்த தம்பதியினர் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ரம்மி விளையாடியவர்கள் யார்?

ரம்மி விளையாடியவர்கள் யார்?

ஆன்லைன் இல் இவர்களுடன் ரம்மி விளையாடியவர்கள் யார்? யாரிடம் பணத்தை இழந்தார்கள்? என்று அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் துவங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
madurai couple who lost money in the playing of raami online attempted suicide : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X