2.0 படத்தை வெளியிடுமா தமிழ்ராக்கர்ஸ்.! 3 ஆயிரம் இணையதளங்களுக்கு தடை.!

இந்நிலையில், இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்ராக்கர்ஸ் உட்பட 3 ஆயிரம் இணையதளங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

|

ரஜினி-எமிஜாக்ஷன், அக்ஷய்குமார் ஆகியோர் நடிப்பில் நாளை (29ம் தேதி) 2.0 படம் வெளிவர இருக்கின்றது.

இந்த திரைப்படம் சுமார் 450 கோடியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவித்தாக தெரிகின்றது.

 2.0 படத்தை வெளியிடுமா தமிழ்ராக்கர்ஸ்.! 3 ஆயிரம் இணையதளங்களுக்கு தடை.!

இந்நிலையில், இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்ராக்கர்ஸ் உட்பட 3 ஆயிரம் இணையதளங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழ்ராக்கர்ஸ் கூறியபடி சர்க்கார் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தை எப்படி தமிழ்ராக்கர்ஸ் வெளியிடும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2.0 திரைப்படம்:

2.0 திரைப்படம்:

ரஜினி-எமிஜாக்ஷன், அக்ஷய்குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த 3 ஆண்டாக திரைப்படம் தயாரிக்கப்பட்டது. தற்போது கிராப்பிக்ஸ் பணிகள் உள்ளிட்டவை முடிந்து நாளை (29ம் நவம்பர்) வெளிவர இருக்கின்றது.

இந்த திரைப்படம் சுமார் 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. படத்திற்கு ஏர்ஆர் ரகுமான் இசைஅமைத்துள்ளார். ஹாலிவுட் கலைஞர்களும், தொழில் நுட்ப வல்லுனர்களுர்களும், ஆடைவமைப்பாளர் உட்பட ஏராளமானோர் இசை அமைத்துள்ளனர்.

தமிழ்ராக்கர்ஸ்:

தமிழ்ராக்கர்ஸ்:

தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட அனைத்து மொழிப்படங்களையும் வெளியாகும் தேதியிலோ அல்லது அதற்கு மறுநாளோ ஹெச்டி தரத்தில் திரைப்படங்களை வெளியிட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது தமிழ்ராக்கரஸ். செலவே இல்லாமல் திரைப்படங்களை வெளியிடுவதால் தமிழ்ராக்கர்ஸை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிக கட்டணம் மற்றும் பல்வேறு செலவுகள் இருப்பதால், அலைச்சல் இல்லாமல் பொது மக்கள் தமிழ்ராக்கர்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.

கெத்துகாட்டும் தமிழ்ராக்கரஸ்:

கெத்துகாட்டும் தமிழ்ராக்கரஸ்:

சொன்னபடி ஹெச்டி தரத்தில் திரைப்படங்களை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் திரைப்பட குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், திரை உலகமே எதிர்த்தாலும், இன்று வரை தமிழ்ராக்கர்ஸை தடை செய்ய முடியவில்லை.
அப்படியே தடை செய்தாலும், வெறு பெயரில் தமிழ்ராக்கர்ஸ் இசட் என் என்றும் முளைத்து விடுகின்றது.

ஆனால் இன்று வரை தமிழ்ராக்கர்ஸை யாராலும் அழிக்கவும் முடியவில்லை. தமிழ்ராக்கர்ஸை பிடிப்பதாக கூறி ஆபாச வலைதளங்களை நிறுவனர்களைத்தான் கைது செய்து வருகின்றனர்.

சர்க்காரை வெளியிட்டது:

சர்க்காரை வெளியிட்டது:

விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது, இந்த படத்தை கூறியபடி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழ்ராக்கரஸ். ஆனால் இந்த அதிர்ச்சி ஹெச்சிடியில் வெளியிட்டதாலும் தமிழ்ராக்கர்ஸ் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சில அளவில் எதிர்ப்பு இருந்தாலும், தமிழ்ராக்கர்ஸ் பொது மக்களிடம் அதிகம் ஆதரவு இருக்கின்றது.

லைக்கா நிறுவனம்:

லைக்கா நிறுவனம்:

2 பாய்ண்ட் ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ள நிலையில், இணையதளங்களில் படம் வெளியிடப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

தமிழ்ராக்கர்சை குறிப்பிட்ட லைக்கா:

தமிழ்ராக்கர்சை குறிப்பிட்ட லைக்கா:

450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 2 பாய்ண்ட் ஓ திரைப்படம் இணையதளத்தில் வெளியானால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக் கூறியுள்ள லைக்கா நிறுவனம், இந்த படத்தை இணையதளத்தில் வெளியிடப்போவதாக தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளது.

உயர்நீதிமன்றம் தடை:

உயர்நீதிமன்றம் தடை:

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொலைபேசி சேவை நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக கூறினார்.

3  ஆயிரம் இணைதளங்களுக்கு தடை:

3 ஆயிரம் இணைதளங்களுக்கு தடை:

இதனையடுத்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய ஆணையிட்ட நீதிபதி சுந்தர், சுமார் 3 ஆயிரம் இணையதளங்களில், டூ பாய்ண்ட் ஓ படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக, புதன்கிழமையன்று விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி சுந்தர் அறிவித்துள்ளார்.

வெளியிடுமா  தமிழ்ராக்கர்ஸ்:

வெளியிடுமா தமிழ்ராக்கர்ஸ்:

ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களையும் தடை உத்தரவையும் மீறி வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் இந்த முறையும் 2.0 திரைப்படத்தை வெளியிட்டு ஒருபுறம் இன்பம் மற்றொரு புறம் துன்பம் என்று இருவகை அதிர்ச்சியையும் ஏற்படுத்தமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் மீது நம்பிக்கை இருப்பதாக தமிழ்ராக்கரஸ் ரசிகர் வட்டம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
madras high court bans rajinikanths 2.0 from 3000 websites : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X