இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

Written By:

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 160 மில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதோடு 3 மில்லியன் செயலிகள் அனைத்து மொபைல் இயங்குதளங்களிலும் பயன்பாட்டில் இருக்கின்றது. இவைகளில் இந்தியர்களுக்கான உருவாக்கப்பட்டிருக்கும் சில பிரத்யேக செயலிகளை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..


ட்ரூ மெசன்ஜர்

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

மின்னஞ்சல்களில் இருப்பதை போன்றே ஸ்பேம் குறுந்தகவல்களை தனி ஃபோல்டரில் வைக்கும் அம்சம் கொண்ட எஸ்எம்எஸ் (குறுந்தகவல்) செயலி தான் ட்ரூ மெசன்ஜர். துவக்கத்தில் செட் அப் செய்யும் போது உங்களின் கருவியின் டீஃபால்ட் குறுந்தகவல் செயலியாகவும் சில ஸ்பேம் எனப்படும் போலி குறுந்தகவல்களையும் அடையாளம் காண செய்யும். அதன் பின் தானாகவே போலி குறுந்தகவல்களை ஸ்பேம் ஃபோல்டரில் பதிவு செய்திடும்.

ஸ்மார்ட் ஸ்பென்ட்ஸ்

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

உங்களது வருமானம் மற்றும் செலவுகளை கன்காணிப்பதோடு உங்களது வருமானத்தில் எப்படி சேமிப்பது போன்றவைகளில் யோசனை வழங்கும் படி ஸ்மார்ட் ஸ்பென்ட்ஸ் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்ஷார்ட்ஸ்

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

செய்திகளை படிக்க போதுமான நேரம் இல்லாதவர்கள் இன்ஷார்ட்ஸ் செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியானது தினசரி செய்திகளை 60 வார்த்தைகளில் மிகவும் சுருக்கமாக வழங்குகின்றது. 60 வார்த்தைகளில் தினசரி நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இன்ஷார்ட்ஸ் செயலி தான் சிறப்பானதாக இருக்கும்.

ஹப்டிக்

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

உங்களது தனிப்பட்ட உதவியாள் போன்று செயல்படும் பிரத்யேக செயலி தான் ஹப்டிக். இந்த செயலி மூலம் கன நேரத்தில் சாட் செய்ய முடிவதோடு இதை பயன்படுத்த பிரத்யேக வார்த்தைகளோ அல்லது குறியீடுகளோ தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாக்ஸி

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

திடீர் பயணங்களின் போது டாக்ஸி தேவைப்பட்டால் இந்த செயலி சிறப்பானதாக இருக்கும். இந்த செயலியானது யுபெர், ஓலா மற்றும் டாக்ஸி ஃபார் ஷ்யூர் போன்ற சேவைகளில் இருந்து தகவல்களை வழங்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்பட்ட சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

பின்கோடு

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

இந்த செயலியில் இந்தியா முழுவதிலும் அனைத்து ஊர்களில் பின்கோடு, போன் நம்பர்கள் மற்றும் வாகனங்களின் லைசென்ஸ் ப்ளேட் உள்ளிட்ட தகவல்களை ஒரே சர்ச் இன்டெக்ஸ் மூலம் வழங்குகின்றது.

ஹெல்திஃபைமீ

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

இந்த செயலியானது நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை ட்ராக் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. இதே அம்சம் பெரும்பாலான ஃபிட்னஸ் செயலிகளில் இருந்தாலும், இந்த செயலியானது நீங்கள் உட்கொள்ளும் பிராண்டுகளையும் அடையாளம் காணும். இதோடு இந்த செயலி ஒவ்வொருவருக்கும் ஏற்ற உடற்பயிற்சிகளையும் பரிந்துரை செய்கின்றது.

ரயில்யாத்ரி

இவை இந்தியர்களுக்கான செயலிகள்..!!

இந்தியாவினுள் ரயிலில் பயணம் செய்யும் போது இந்த செயலியானது ஒருவருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகின்றது. இந்த செயலியில் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், ரயில்களின் நேரம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை வழங்குகின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

English summary
Made for India apps that simplify your life. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot